சுவிட்சர்லாந்தில் மாயமான 8 வயது சிறுமி,
 • சுவிட்சர்லாந்தில் மாயமான 8 வயது சிறுமி,

  சுவிட்சர்லாந்தின் நீயுசேடெல் மாகாணத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மாயமான 8 வயது சிறுமி தொடர்பில் அவரது தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

  நீயுசேடெல் மாகாணத்தில் உள்ள La Chaux-de-Fonds நகரத்தில் குடியிருக்கும் இனாயா என்ற 8 வயது சிறுமி சனிக்கிழமை காலை முதல் காணாமல் போனார்.

  குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாகாணம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

  மட்டுமின்றி குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

  இதனிடையே பொலிசாரின் விசாரணையில், குறித்த சிறுமி தமக்கு மிக நெருக்கமான சில பொருட்களையும் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

  இந்த நிலையில் பொலிசாரால தேடப்பட்டு வந்த சிறுமி பிரான்சில் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சிறுமி திடீரென்று மாயமானதன் காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

  மேலும் விரிவான விசாரணைக்கு நீயுசேடெல் மாகாண பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
தொழில் நுட்பம்
இந்திய சட்டம்
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்