சுவிட்சர்லாந்து ரயில்வே தான் ஐரோப்பாவிலேயே சிறந்தது கருத்து கணிப்பு தகவல்,
 • சுவிட்சர்லாந்து ரயில்வே தான் ஐரோப்பாவிலேயே சிறந்தது கருத்து கணிப்பு தகவல்,

  சுவிட்சர்லாந்து நாட்டின் ரயில்வே துறை தான் ஐரோப்பாவிலேயே சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  பிரித்தானியாவைச் சேர்ந்த Loco2 எனும் பயணம் தொடர்பான இணையதளம், ஐரோப்பாவில் சிறந்த ரயில்வே துறை எது என்ற கருத்து கணிப்பை நடத்தியது.

  இதில் 16 நாடுகளின் ரயில்வே துறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் சுவிட்சர்லாந்து ரயில்வே முதலிடத்தை பிடித்து, ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில்வே என்னும் சிறப்பை பெற்றுள்ளது.

  சுவிஸ் ரயில்வே-யில் குழந்தைகள் குடும்பத்துடன் பயணிக்கும் வகையில் வசதிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள், மிதிவண்டி ஓட்டிகள் மற்றும் குளிர்கால விளையாட்டுகள் போன்றவற்றிற்கும் வசதிகள் செய்யப்பட்டிருப்பதில் சுவிஸ் ரயில்வே முன்னணியில் உள்ளது.

  குறிப்பாக, சுவிஸ் ரயில்வே மாற்றுத்திறனாளிகளுக்காக அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. அத்துடன், இருசக்கர வாகன நிலையங்களுக்கு வாய்ப்புகள், பனிக்காலத்தில் சலுகை விலையில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகள் வழங்குதல் ஆகியவற்றையும் இந்த ரயில்வே செய்து வருகிறது.

  அதே போல் உணவு வழங்குதலில் சுவிஸ் ரயில்வே இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலை பேணுவதில் ஜேர்மனிக்கு அடுத்த இடத்தில் சுவிஸ் ரயில்வே உள்ளது.

  இவற்றின் அடிப்படையிலேயே சுவிஸ் ரயில்வேயானது, ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில்வேயாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் சுவிஸ் ரயில்வே ஒரே சீராக உள்ளதாக ஒப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
சிறுவர் உலகம்
தையல்
 மரண அறித்தல்