சுவிட்சர்லாந்தில் அந்நிய மொழி பேசுபவர்கள் அதிகரிப்பு,
 • சுவிட்சர்லாந்தில் அந்நிய மொழி பேசுபவர்கள் அதிகரிப்பு,

  சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி, இத்தாலிய மொழி மற்றும் Romansh மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து பிரெஞ்சு மற்றும் அந்நிய மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.Swiss Germanஐ தங்கள் முதன்மை மொழியாக பேசுபவர்களின் எண்ணிக்கை 1970க்கும் 2016க்கும் இடையில் 66 சதவிகிதத்திலிருந்து 63 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இத்தாலிய மொழி மற்றும் Romansh மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையும் முறையே 11 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகவும் 0.8 சதவிகிதத்திலிருந்து 0.5சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.

  இதற்கு மாறாக இதே காலகட்டத்தில் பிரெஞ்சு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாக அதிகரித்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

  சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றையும் தங்கள் முதல் மொழியாக பேசாதவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு சொல்லும் அளவில் அதிகரித்துள்ளது.

  1970இல் 4 சதவிகிதமாக இருந்த எண்ணிக்கை 2016இல் 22 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சுவிஸ் நாட்டவர்கள் அலுவலகத்தில் Swiss German மொழியையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் (65%), அதைத்தொடர்ந்து ஜேர்மன் மொழி (35%) மற்றும் பிரெஞ்சு மொழி (29%) பேசப்படுகிறது. 19 சதவிகிதத்தினர் ஆங்கிலமும் 9 சதவிகிதத்தினர் இத்தாலிய மொழியும் பேசுகிறார்கள்.

  வீடுகளில் அல்லது உறவினர்களுடன் பேசும்போது மக்கள் பெரும்பாலும் Swiss German (59%) அல்லது பிரெஞ்சு மொழி பேசுகிறார்கள் (24%) . குடும்பங்களில் பேசப்படும் வேறு மொழிகள் ஜேர்மன் மொழி (11%) மற்றும் இத்தாலிய மொழி (8%). இதிலும் ஆங்கிலமும் (5%) Portugueseம் (4%) அதிகம் இடம்பெறுகின்றன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
தமிழகச் செய்திகள்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink