காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு,
 • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு,

  டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலாண்மை வாரியத்துக்கு தண்ணீர் பகிர்வு அதிகாரத்தை தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  மத்திய அரசின் வரைவு திட்டத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. மேலும் 4 மாநில கருத்துக்களை கேட்ட பின் தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. மத்திய அரசு தமது வரைவு திட்டத்தில் மாற்றம் செய்து நாளை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்ற குழு உத்தரவுப்படி கர்நாடகா நீர் விடவில்லையெனில் மேலாண்மை வாரியத்திடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்றும், மத்திய அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. புதிய அரசு அமைய உள்ளதால் ஜூலை முதல் வாரம் வரை வழக்கை ஒத்திவைக்க கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  புதிய அணைகளை கட்ட கூடாது

  காவிரியில் புதிய அணைகளை கட்ட கூடாது என்று சுப்ரீகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் புதிய அணைகள் கட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலாண்மை  வாரிய அனுமதியின்றி அணை, தடுப்பணை கட்டக்கூடாது என்றும்  தலைமை நீதிபதி தெரிவித்தார்.

  காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

  காவிரி வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில்  நடைபெற்றது.  வரைவு செயல் திட்டம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன.

  காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

  காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு வாதம் செய்தது.

   காவிரி அமைப்பின் தலைவராக  ஓய்வு பெற்ற  நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை  சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

  கர்நாடகாவில் அரசு அமைக்கும் முயற்சி நடைபெறுவதால் காவிரி வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும்  என கர்நாடக அரசு தரப்பில் வாதம் செய்தது.

  காவிரி மேலாண்மை வாரியம் என அமைப்புக்கு பெயர் வைக்க மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் ஒப்புதல் அளித்து உள்ளது.

  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறியதாவது:-

  காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு. மத்திய அரசுக்கு இல்லை.

  கர்நாடகாவோ, தமிழகமோ வாரியத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது.

  நீர்ப் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை. காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது.அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்   என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

  காவிரி வரைவு செயல் திட்டத்தில் திருத்தம் செய்து நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு  வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
இலங்கை சட்டம்
இலங்கை செய்தி
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort