ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்,
 • ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்,

  புதுடெல்லி: தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் ஆலை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுத்தனமை கொண்ட வாயு வெளியாகிறது என தெரிவித்து பொதுமக்கள் உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அனைவரும் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  இதையடுத்து ஆலை பகுதியை சோதனை செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதனை மூடுமாறு உத்தரவிட்டது. ஆனால் ஆலையை மூட அதன் நிர்வாகம் முன் வராததால் ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது.

  இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கானது இதுவரை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

  அதில், “ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடக்கோரி தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கை ஆணையம் முறையாக விசாரணை நடத்தாமால் ஆலை இயங்க அனுமதி அளித்ததற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

  இதையடுத்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஆலை நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
சிறுவர் உலகம்
இலக்கியம்
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்