டெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் மிரட்டிய புழுதி புயல்,
 • டெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் மிரட்டிய புழுதி புயல்,

  வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு.தலைநகர் புதுடெல்லியில் இன்று அதிகாலையில் புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக திடீரென புழுதிப்புயல் வீசியது. 50-க்கும் மேற்பட்டார் பலியாகியுள்ளனர்.

  இந்நிலையில் தலைநகர் டெல்லியில் அதிகாலையில் சாணக்கியபுரி, வடக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. இதில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இந்த புழுதி காற்றால் மரங்கள் சில வேரோடு சாய்ந்தது. அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு கூறியுள்ளது.

  முன்னதாக புழுதி புயல் காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. மேலும் இந்த புழுதி புயலுக்கு 80க்கும் அதிகாமானவர்கள் பலியாகியுள்ளனர்.

  முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் அண்மையில் புழுதிப் புயல் தாக்கியதிலும், இடி-மின்னலுடன் பெய்த மழையிலும் சுமார் 134 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

  புழுதிப் புயலின்போது சாய்ந்த மரங்கள், சேதமடைந்த மின்கம்பிகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் இடியுடன் கூடிய கனமழையும், புழுதிப் புயலும் மாறி மாறித் தாக்கத் தொடங்கின.

  முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பலத்தக் காற்றின் காரணமாக, சாலைகளில் சென்ற லாரி போன்ற உயரமான வாகனங்கள் நிலைதடுமாறி கீழே சாய்ந்தன. இதனால், அதில் சென்றவர்கள் காயமடைந்தனர். அதேபோல், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் கீழே விழுந்தனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
வீடியோ
ஆன்மிகம்
சினிமா
 மரண அறித்தல்