சுவிஸ் கல்வியில் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கம் தமிழ் மாணவி,
 • சுவிஸ் கல்வியில் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கம் தமிழ் மாணவி,

  சுவிட்சர்லாந்தில் மொழி மற்றும் கலாச்சார பாடங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கத்தை உணர்ந்ததாக தமிழ் மாணவி ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.

  சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் குடியிருந்து வருபவர் இலங்கை தமிழரான லாவண்யா சின்னதுரை(28).

  கல்வியில் ஊடுருவியிருக்கும் அரசியல் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள லாவண்யா, புலம்பெயர் தமிழர்களிடத்தில் புலிகள் அமைப்பு எவ்வாறு அரசியல் தாக்கத்தை உருவாக்கியது என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.

  சிறு வயதில், மாவீரர் நாளில் புலிகள் அமைப்பின் ராணுவ உடையுடன் திரிவது என்பது மிக சாதாரணம் என தெரிவித்துள்ள அவர்,

  தற்போது சுவிஸ் மொழி மற்றும் கலாச்சார பாடங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  மொழி மற்றும் கலாச்சார பாடத்திட்டங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கம் இருப்பதால் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேறி தம் மக்களுக்காக போராட களமிறங்க வேண்டும் என்பதல்ல,

  மாறாக நாம் சுவிட்சர்லாந்தில் ஏன் வாழ்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தாலே போதும், அதுவே மிக முக்கியமானது என்றார் லாவண்யா.

  பெர்ன் மாகாணத்தின் கல்வித்துறையானது மொழி மற்றும் கலாச்சார கல்வியில் வீணாக தலையிடுவதில்லை. அரசியல் சார்ந்து நடுநிலை பேணுகிறது.

  மாணாக்கர்களிடையே அரசியல் சார்ந்த ஊடுருவல் இருப்பதாக உணர்ந்தால் அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ள லாவண்யா,

  எந்த கருத்தியலுக்கும் இரண்டு பக்கம் உண்டு எனவும், அதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.

  சுவிஸ் மொழி மற்றும் கலாச்சார பாடங்களில் துருக்கி அரசியலின் தாக்கம் இருப்பது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

  புலம்பெயர் தமிழ் சமூகமானது மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாகும், மொழி மற்றும் கலாச்சார வகுப்புகளில் புலிகள் தொடர்பிலான கருத்துகளுக்கு மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்,

  மட்டுமின்றி, குறித்த வகுப்புகளால் மொழியும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்துள்ளோம் என்றார். மேலும் வரலாறு என்பதே முழுக்க முழுக்க அரசியல் தானே எனவும் அவர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தமிழகச் செய்திகள்
சினிமா
தொழில் நுட்பம்
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்