கனடா அரசியல் அமைப்பும் அதிகாரங்களும் அறிந்து கொள்வோம்,
 • கனடா அரசியல் அமைப்பும் அதிகாரங்களும் அறிந்து கொள்வோம்,

  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich-Switzerland-கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் 10 மில்லியன் சதுர கிலோமீற்ரர் நிலப் பரப்பளவை தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாகும். வடக்கே ஆட்டிக் சமுத்திரமும், கிழக்கே அத்தலாண்டிக் சமுத்திரமும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசுபிக் சமுத்திரமும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

  கனடாவின் தலை நகரமாக ஒட்டாவா மாநகரம் அமைந்துள்ளது. தற்போதைய பிரதம மந்திரியாக மாண்பு மிகு  ஸ்றீபன் ஹாபர் பதவி வகிக்கின்றார். கனடாவில் தற்போதைய சனத்தொகை 33 மில்லியன்கள் என கணக்கெடுக்கப் பெற்றுள்ளது. இந்தத் சனத்தொகையில் 3 சதவீதத்தினர் பூர்வீக குடிகளாவர். இரண்டாவது உலகப் போர் ஆரம்பமாவதற்கு முன் கனடா வந்த குடிவரவாளர்களில் பெரும்பாலனவர்கள் பிரித்தானியா அல்லது கிழக்கு ஜரோப்பாவில் இருந்தே வந்தார்கள். 1945ம் ஆண்டின் பின் தெற்கு ஜரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் குடிவரவாளர்கள் கனடா வர ஆரம்பித்தார்கள்.

  கனடாவின் நான்காவது பெரிய முக்கிய நகரமான ஒட்டாவா கனடாவின் தலைநகராகும். இந் நகர் தலைநகராக 1857 ம் ஆண்டு விக்ரோறியா மகாராணியாரால் தேர்ந்தெடுக்கப் பெற்றது. விக்ரோறியா மகாராணியார் தற்போது உள்ள இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் பூட்டியாராகும். ஒட்டாவா தலை நகரம் 4700 சதுர கிலோமீற்ரர் நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டதாகும்.

  கனடா அரசின் தலைவராக பிரதமர் விளங்குகின்றார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆகும் தகுதி பெறுகின்றார். பிரதமரையும் அவர் தெரிவு செய்யும் அமைச்சரவையையும் அதிகாரப்பூர்வமாக ஆளுனர் நியமிக்கின்றார். மரபுரீதியாக, அமைச்சரவை, பிரதமரின் கட்சியிலிருந்து பிரதமரால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களால் ஆனது. அரச செயல் அதிகாரம் பிரதமராலும் அமைச்சரவையாலும் வெளிப்படுத்தப்படுகின்றது.

  அரசமைப்பு
  கனடாவில் மூன்று படித்தரங்களில் அரசாங்கம் இயங்குகின்றது. அவையாவன:
  1.  Federal government - சமஷ்டி அரசாங்கம் (கனடா அரசாங்கம்)
  2.  Provincial and territorial governments - மாகாணமும் பிரதேசவாரியான அரசாங்கங்களும்
  3.  Municipal governments (cities, towns and villages) - மாநகர அரசாங்கங்கள்

  கனடாவின் பலவிதமான பொறுப்புகளும் மத்திய (சமஷ்டி –Federal) அரசாங்கத்துக்கும், மாகாண மற்றும் பிரதேச வாரியான (Provincial and territorial governments) அரசாங்கங்களுக்கும் இடையில் பகிந்தளிக்கப்பட்டுள்ளது.

  பிரித்தானிய பாராளுமன்றத்தின்(Westminster system) (வெஸ்ட்மினிஸ்டர் முறைமையை) பின்பற்றி இயங்கும் கனடா, ஒரு கூட்டாட்சி அரசாகும். (Parliamentary democracy and a constitutional monarchy) பாராளுமன்ற சனநாயகத்தையும், யாப்பில் முடியாட்சியையும் கொண்டதே கனடிய அரசாங்க முறையாகும்.

  கனடாவின் மத்திய பாரளுமன்றமானது (Federal Government) ஆளுனர், மக்களவை, செனற் ஆகிய 3 பகுதிகளைக் கொண்டதாகும்.

  மாகாராணி எலிஸபெத் II கனடாவின் சம்பிரதாயபூர்வமான (head of state) நாட்டுத் தலைவியாக இருக்கின்றார். கனடாவில் மாகாராணியை (governor general) கவர்னர் ஜனரல் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, நாட்டுத் தலைவரின் கடமைகளையும் அவர் நிறைவேற்றுகிறார்.

  கனடாவின் முடிக்குரியவரின் சார்பாக, மரபு ரீதியான சில முக்கிய கடமைகளை ஆளுனர் ஆற்றுவார்.  கனடா பிரதமரின் பரிந்துரைக்கமைய கனடாவின் முடியுரிமைக் குரியவரால் ஆளுனர் நியமிக்கப்படுகின்றார். கனடாவின் தற்போதைய ஆளுனராக மேன்மை தங்கிய  டேவிட் ஜோன்சன் அவர்கள் (கனடாவின் 28 வது ஆளுனராக) பதவி வகிக்கின்றார்.

  உதாரணமாக, எப்பொழுதும் பிரதமரும் இயங்கும் ஒர் அரசாங்கமும் கனடாவில் இருப்பதை உறுதிப்படுத்துவது கவர்னர் ஜனரலின் மிக முக்கியமான கடமைகளுள் ஒன்றாகும். அங்கீகாரத்தை அல்லது (Royal Assent ) அரச சம்மதத்தைக் கொடுத்து பாராளுமன்ற நகல்களை கவர்னர் ஜனரல் சட்டமாக்குவார்.

  கனடாவின் (சமஷ்டி –Federal) மத்திய அரசே கனடாவை நாடு என்ற வகையில் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக கூட்டரசு நிர்வாகம், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை மத்திய அரசு கவனிக்கின்றது.

  பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை -The House of Commons அல்லது பாராளுமன்றத்தின் "lower house - கீ்ழ்ச் சபை"  கனடிய மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பெறுகின்றனர்.

  மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் 308 உறுப்பினர்களை கொண்ட மக்களவையே கனடிய பாராளுமன்றத்தின் முக்கிய பிரிவு ஆகும். ஒவ்வொரு உறுப்பினரும் கனடாவின் ஒரு தேர்தல் தொகுதிக்கும், அத்தொகுதியின் மக்களுக்கும் சார்பாகச் செயல்படுகின்றார். தேர்தல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.

  செனட்சபையில் 105 அங்கத்தினர்கள் செர்த்துக் கொள்ளப்படுகின்றனர். செனட் பிரதிநிதித்துவம் நிலப்பகுதி அடிப்படையில் அமைகின்றது. செனற் உறுப்பினர்கள் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு ஆளுனரால் நியமிக்கப்படுகின்றார்கள்.

  கனடா அரசின் தலைவராக பிரதமர் விளங்குகின்றார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆகும் தகுதி பெறுகின்றார். பிரதமரையும், அவர் தெரிவு செய்யும் அமைச்சரவையையும் அதிகாரப்பூர்வமாக ஆளுனர் நியமிக்கின்றார்.

  மரபுரீதியாக, அமைச்சரவை, பிரதமரின் கட்சியிலிருந்து பிரதமரால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களால் ஆனது. அரச செயல் அதிகாரம் பிரதமராலும் அமைச்சரவையாலும் வெளிப்படுத்தப்படுகின்றது.

  சட்டம்
  கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அதன் மத்திய, மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விபரிக்கின்றது.

  மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றன.

  கனடாவின் நீதியமைப்பு (Judicial System) சட்டங்களை புரிந்து நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களை செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே நீதிக் கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது.

  1.  பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை - The House of Commons அல்லது "lower house - கீ்ழ்ச் சபை" கனடாவின் சட்டங்களை இயற்றுகின்றது.
  பொதுசன வாக்கெடுப்பு மூலம் கனேடிய மக்கள், (House of Commons) பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகளை நாடு முழுவதிலும் இருந்து தெரிவு செய்வார்கள். ஒர் அரசியல் கட்சியைச் சேர்ந்த இப் பிரதிநிதிகள் (Members of Parliament - MPs) பாராளுமன்ற அங்கத்தவர்கள் MP என அழைக்கப்படுவர். House of Commons - பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை யில் 308 பாராளுமன்ற உறுப்பினர்கள்(MP) தெரிவு செய்யப்படுகின்றனர்.

  பெரும்பான்மையான MP க்களைக்கொண்ட அரசியல் கட்சி, அரசாங்கத்தை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராக இருப்பார். கனடா அரசாங்கத்தின் தலைவராகவும் பிரதமர் பணியாற்றுவார்.

  Cabinet - அமைச்சரவையில் சேவையாற்றத் தேவையான அமைச்சர்களை,  பாராளுமன்றப் பிரதிநிதிகளில் இருந்து, பிரதமர் தெரிவுசெய்வார். குடியகல்வு, பிரஜா உரிமை, நீதி உட்பட ஏனைய விவகாரங்களுக்கும் அமைச்சர்கள் இருப்பார்கள். அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான முக்கியமான தீர்மானங்களை அமைச்சரவை எடுக்கும்.

  சமஷ்டி அரசாங்கம் (federal government) (கனேடிய அரசாங்கம்) முழு நாட்டையும் பாதிக்கக் கூடியவற்றை மேற்பார்வை செய்கிறது. உதாரணமாக, பிரஜா உரிமை குடிவரவு, தேசிய பாதுகாப்பு மற்றும் எனைய நாடுகளுடனான வியாபாரம் போன்றவற்றை கனேடிய அரசாங்கம் முகாமைத்துவம் செய்கிறது.

  பாராளுமன்ற உறுப்பினர்கள்(political parties) அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

  (Bloc Québécois (BQ) புளொக் கியூபக்குவா(BQ)
  (Conservative Party of Canada) கனடாவின் பழமைபேணும் கட்சி
  (Green Party) பசுமை கட்சி
  (Liberal Party of Canada) கனடாவின் லிபரல் கட்சி
  (New Democratic Party) (NDP). புதிய சனநாயகக் கட்சி

  சில கட்சிகள், ஒரு குறிப்பிட்ட கருத்துடைய குழுவை அல்லது நாட்டின் ஒரு பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஏனைய கட்சிகள் பல பிரச்சினைகளையும் நாட்டின் எல்லாப் பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இக்கட்சிகளுள் பெரும்பாலானவை ஒன்ராரியோவில் மாகாண மட்டத்தில் செயற்படுகின்றன.

  பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை - House of Commons  உத்தேசமாக முன்வைத்த சட்டங்களை செனட்  சபை - Senate அல்லது "மேற்சபை - upper house "  மீளாய்வு செய்யும். செனட்டர்கள் கனடா முழுவதில் இருந்தும் தெரிவு செய்யப்பெற்றிருப்பார்கள். பிரதமரின் ஆலோசனையின்பேரில் கவர்னர் ஜனரலினால் செனட்டர்கள் நியமனம் செய்யப்பெறுவர். இவ்வாறு நியமனம் பெற்ற 105 அங்கத்தவர்கள் செனற்சபையில் இருப்பார்கள்.

  2.  மாகாண – Provincial, டெரிடோரியல் - territorial governments) அரசாங்கம்)
  கனடாவில் 10 மாகாண அரசாங்கங்களும் 3 டெரிடோரியல் அரசாங்கங்களும் காணப்படுகின்றன.
  ( Municipal governments) மாநகராட்சி அரசாங்கங்கள் (மாநகர்கள், நகரங்கள், கிராமங்கள்)

  உதாரணமாக: ஒன்ராரியோ மாகாண அரசாங்கம்
  ஒவ்வொரு மட்டத்திலான அரசாங்கத்தைப் பொறுத்தும் அவற்றின்பொறுப்புக்கள் வித்தியாசமாக அமைகின்றன.

  மாகாண மட்டத்தில் லெப்டினட் கவர்னர் - lieutenant governor, மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
  ஒன்ராரியோவில் (Legislative Assembly) சட்ட சபை சட்டங்களை இயற்றும். மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் (Members of Provincial Parliament) (MPPs)மாகாண பாராளுமன்ற அங்கத்தவர்கள் என அழைக்கப்படுவார்கள்.

  பெரும்பான்மையாகத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக்(MPP) கொண்ட அரசியல் கட்சி, அரசாங்கத்தை அமைப்பதோடு அதன் தலைவர் (premier) பிறெமியராக - முதல்வராக இருப்பார். ஒன்ராரியோ அரசாங்கத்தின் தலைவராகவும் பிறெமியராகவும் விளங்குவார். ஒன்றாரியோ மாகாண அரசின் தற்போதைய முதல்வராக டால்ரன் மக்கென்றி அவர்கள் பதவி வகிக்கின்றார்.

  பிறெமியர்-முதல்வர் மாகாண அரசாங்கத்தில் தலைவராக இருந்து நடாத்துவதுடன் (cabinet) அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மந்திரிமார்களை அவர், MPP க்களில் இருந்து தெரிவு செய்வார்.

  அமைச்சரவை அரசாங்கத்தின் கொள்கையைத் தயாரித்து, மீளாய்வுக்காக சட்டசபையில் அறிமுகப்படுத்தும்.

  ஒன்ராரியோவில் (Legislative Assembly) சட்டசபை சட்டங்களைத் தயாரிக்கிறது. மாகாணம் முழுவதில் இருந்தும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் (Members of Provincial Parliament) (MPPs) மாகாண பாராளுமன்ற அங்கத்தவர்கள் என அழைக்கப்படுவர். சட்டசபையில் 107 MPPக்கள் அங்கம் வகிக்கின்றனர். MPPக்கள் பின்வரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர்.
  (Ontario Liberal Party)ஒன்ராரியோ லிபரல் கட்சி
  (Progressive Conservative Party of Ontario) ஒன்ராரியோவின் முற்போக்குக் கன்ஸவேர்டிவ் கட்சி
  (New Democratic Party) புதிய ஜனநாயகக் கட்சி

  ஒன்ராரியோவில் தேர்தல்கள் ஒவ்வொரு 4 வருடங்களு க்கு ஒருமுறை நடைபெறும். பெரும்பான்மையாகத் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடைய MPP க்களைக்கொண்ட அரசியல் கட்சி அரசாங்கத்தை அமைக்கும். அதன் தலைவராகப் (premier) பிறெமியர் இருப்பார். ஒன்ராரியோ அரசாங்கத்தின் தலைவராகவும் பிறெமியர் விளங்குவார்.
  (premier) பிறெமியர் அரசாங்கத்தை முன்னின்று நடாத்துவார்.மேலும் அவர், அமைச்சரவையில் சேவையாற்றும் அமைச்சர்களை MPP க்களில் இருந்து தெரிவுசெய்வார். அமைச்சரவை அரசாங்கத்தின் கொள்கையைத் தயாரிப்பதுடன், சட்டங்களை அறிமுகம் செய்து(Legislative Assembly) சட்டசபையின் பரிசீலனைக்காக அவற்றைச் சமர்ப்பிக்கும்.

  மாகாண அரசாங்கம் பின்வரும்சேவைகளை வழங்குகிறது.
  சுகாதார நலன் பேணல் - OHIP (Ontario Health Insurance Plan), (ஒன்ராரியோ சுகாதார காப்புறுதித் திட்டம்) மருத்துவமனைகளும், மருத்துவ சேவைகளும் கல்வி – ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களும் தொழிலை தக்கவைத்துக் கொள்ளும் திட்டங்களும்.

  தொழில்வாய்ப்பு – ஒழுங்குபடுத்தப்பட்டதொழில், பணிகள், தொழிலாளர் உரிமைகளை அடைந்து கொள்ள வழிவகை செய்தல்
  போக்குவரத்து – பெருந்தெருக்களும் சாரதி அனுமதிப்பத்திரங்களும்,
  குறைந்தசெலவிலான (subsidized) (மானிய அடிப்படையில்) வீட்டு வசதிகள், குடும்பங்களுக்கான சில சேவைகள் – திருமண, பிறப்புச் சான்றிதழ்களும் சில சிறுவர் நலன் சேவைகளும்,
  (Some civil and criminal justice services) சில சிவில், குற்றவியல் நீதிச் சேவைகளும், ஒன்ராரியோவில் குடியிருப்பாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்க, மாகாண அரசாங்கம், உள்ளூர் சமூக நிறுவனங்களுக்கும் அணுசரணை வழங்குகிறது.

  (Your local municipality) உங்கள் உள்ளூர் நகராட்சி அவற்றின் பரிமாணம், வரலாற்றின் அடிப்படையில் மாநகரம், நகரம், சிற்றூர் அல்லது கிராமம் என அழைக்கப்படலாம்.

  (Municipal governments) மாநகராட்சி அரசாங்கங்கள், தீயணைப்பு, பொலிஸ்சேவைகள், சுத்தமான நீர், பொதுச் சுகாதாரம், தற்காலிக சேவைகள் போன்ற பல முக்கியமான நாளாந்த சேவைகளை வழங்குகின்றன.மேலும் அவை பூங்காக்களைப் பராமரிப்பதுடன் வாசகசாலைகளையும் முகாமைத்துவம் செய்கின்றன.

  (Counties, Regions and Districts) மாவட்டங்கள், பிரதேசங்கள், பிரிவுகள்
  ஒன்ராரியோவின் பல இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளூர் நகராட்சிகளை உள்வாங்கும் ஒரு பகுதியில் சில சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு மாவட்டம், பிரிவு, பிரதேச அரசாங்கம் அதன் எல்லைக்குள் (local municipality) ஒரு உள்ளூர் நகராட்சித் தொகுப்பு காணப்படும். உதாரணமாக,(Region of Halton) ஹல்டன் பிரதேசம், (Town of Oakville) ஓக்கவில் நகரம்,(Town of Milton)மில்டன் நகரம், (City of Burlington) பேர்லிங்டன் நகரம், (Town of Halton Hills )ஹல்டன் ஹில்ஸ் நகரம் ஆகியவற்றுக்கு பிரதேச சேவைகளை வழங்குகின்றன.

  ஒரு பிரதேச அரசாங்கம் வழங்கும் சேவைகளுக்கான சில உதாரணங்களில் பின்வருவன உள்ளடங்கும்: நீர் வினியோகம், கழிவுநீர் சுத்திகரிப்பும் அது தொடர்பான பணிகளும், (கழிவுப்பொருட்கள் சேகரிப்பும் மறுபயனீடும்) போன்ற கழிவுப்பொருள் முகாமைத்துவம்.
  ஒவ்வொரு நகராட்சி, மற்றும் பிரதேசத்தின் குடியிருப்பாளர்களும் உள்ளூர் அரசாங்கத்தை வழி நடாத்துவதற்கு ஒரு மேயர், சபை அங்கத்தவர்கள், பாடசாலை சபை தர்மகர்த்தாக்களைத் தெரிவு செய்வார்கள். வரவுசெலவு, திட்டங்கள், நிர்வாகப் பிரச்னைகளை (Committees of councillors) கவுன்ஸில் அங்கத்தவர்களின் கமிட்டிகள் கலந்தாலோசனை செய்து , சபையின் விவாதத்துக்காக அவை சமர்ப்பிக்கப்படும். பிரஜைகள், வர்த்தக உரிமையாளர்கள், சமூகக் குழுக்கள் அவர்களின் பிரச்னைகளையும் கருத்துகளையும் கவுன்ஸில் அங்கத்தவர்களிடம் சபைக் கூட்டங்களில் முன்வைக்கமுடியும்.

  உங்கள் உடமைகளுக்கு வரியாகத் செலுத்தப்பட்ட டொலர்களை எவ்வாறு செலவு செய்வது என்பதை கமிட்டிகள், மேயர், கவுன்ஸில் அங்கத்தவர்கள் ஆகியோர் தீர்மானிப்பார்கள். உங்கள் சமூகத்தில் கிடைக்கும் சேவைகளின் தரம் அவற்றின் மட்டத்தையும் அவர்கள் நிர்ணயிப்பார்கள்.

  ஒன்ராரியோ முழுவதும் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை (Municipal elections) மாநகராட்சித் தேர்தல்கள் நடைபெறும். உங்கள் சமூகத்தில் கிடைக்கும் சேவைகளில் நீங்கள் அக்கறையுடன் செயற்பட்டால், நகராட்சித் தேர்தலில் வாக்களிப்பது முக்கியானதாக இருக்கும். உதாரணமாக, அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்களின் தேவைகளை மிகச் சிறப்பாக எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை பாடசாலைச் சபை தர்மகர்த்தாக்கள் தீர்மானிப்பர். பாடசாலைகள் பராமரிப்பு, நிர்வாகம், ஆசிரியர்களையும் , பாடசாலையின் ஏனைய பணியாளர்களையும் வாடகைக்கு அமர்த்துவது, போன்ற விடயங்களில் தர்மகர்த்தாக்கள் தீர்மானங்களை எடுப்பார்கள். கல்விக்கான செயல் திட்டங்களில் செலவு செய்வதற்கும் அவர்கள் அனுமதியளிப்பார்கள்.


  3.  மாநகர(உள்ளூர்) அரசாங்கம் Municipal (Local) Government
  நீங்கள் வசிக்கும் மாநகரம், நகரம், அல்லது கிராமத்துக்கு ஓர் மாநகராட்சி (உள்ளூர்) அரசாங்கம் இருக்கும். அவசரகால சேவைகள் (பொலிஸ், தீயணைப்பு), பொதுச் சுகாதாரமும் கழிவு முகாமைத்துவமும்(கழிவுப்பொருட்களைச் சேகரிப்பதும் மீள்பயன்பாடும்) போன்ற நாம் தங்கியிருக்கும் நாளாந்த சேவைகளை மாநகர அரசாங்கங்கள் வழங்குகின்றன.

  மாநகர சபைகள் (Municipalities), பாரிய மாவட்டத்தின் அல்லது பிரதேச அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும். மாநகரசபை தலைவர் மேயர் என அழைக்கப்பெறுகின்றார். உதாரணமாக (City of Oshawa ) ஒஷவா நகரம், (Durham Region) டுர்ஹாம் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்..

  ஒவ்வொரு மாநகராட்சியிலும் வசிப்பவர்கள், உள்ளூர் அரசாங்கத்தை நடாத்துவதற்கு ஒரு மேயரையும் கவுன்ஸில் அங்கத்தவர்களையும் தெரிவு செய்வார்கள். வரவுசெலவுத் திட்டங்கள், நிர்வாகப் பிரச்னைகளை விவாதிப்பதற்காக, (Committees of councillors) கவுன்ஸிலர்கள் சபைகள் கலந்தாலோசித்து, விவாதிப்பதற்காக சபையில் (the council) சமர்ப்பிக்கப்படும். பிரஜைகள், வர்த்தக உரிமையாளர்கள், சமூகக் குழுக்கள் அவர்களின் பிரச்னைகளையும் கருத்துகளையும் (councillors) கவுன்ஸிலர்களிடம் குழுக் கூட்ட மட்டத்தில் முன்வைக்க முடியும்.

  மாநகர அல்லது பிரதேச அரசாங்கங்கள் கீழ்க்குறிப்பிட்ட சேவைகளை வழங்குகின்றன:
  சுகாதாரம், பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் தனிநபர்களினதும் உடைமைகளினதும் பாதுகாப்பு – பொலிஸ், தீயணைப்பு,அம்புலன்ஸ் சேவைகள் போன்ற அவசரகாலசேவைகள்.
  மானியத்துடனான வீட்டு வசதிகள்
  சமூகசேவைகள் – (Ontario Works) போன்ற தொழில் வாய்ப்பும் வருமான ஆதார சேவைகளும்
  பொதுச் சுகாதாரம்
  சிறுவர்களுக்கானசேவைகள்
  மூத்தவர்களுக்கும் நெடுங்கால பராமரிப்பும்
  நீர் வினியோகம், கழிவுநீர் அகற்றல் சுத்திகரிப்பு பணிகள் – போன்ற பொதுப் பயன்பாடுகள்
  கழிவு முகாமைத்துவம் - கழிவுகள் சேகரிப்பு,(Blue Box and Materials Recycling) நீலப்பெட்டியும் பொருட்களின் மீள்பயன்பாடும், நிலங்களை நிரப்புதல், கழிவுப்பொருட்களை நிலத்தில் நிரப்புதலும் வேலைத்தளங்களை இடமாற்றம்செய்தலும்
  பிரதான வீதிகள் (பொதுப்பாதைகள்)
  பொதுவான இடமாற்றமும் விஷேடமானவர்களுக்கான இடமாற்றமும்(உதாரணமாக மூத்தவர்களை இடமாற்றம் செய்வது)
  கலாச்சாரம், பூங்காக்கள், பொழுது போக்கு வசதிகளும் பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாத்தலும்
  பொது வாசக சாலைகள்
  மழைநீர் வழிந்தோடல் தவிர்ந்த வடிகாலமைப்பு, வெள்ளக் கட்டுப்பாடு போன்றவை
  வேலிகளும் தகவல் பலகைகளும் உட்பட கட்டமைப்புகள்
  வாகன தரிப்பிடங்கள்
  (உதாரணமாக புகைத்தல், கழிவு வாய்க்கால்களைப் பயன்படுத்தல் மரம் வெட்டுதல் போன்றவை தொடர்பான இடைக்காலச் சட்டங்களை) நடைமுறைப்படுத்தல்
  பொருளாதார அபிவிருத்திச் சேவைகள்
  திட்டமிடலும் வலயங்களாகப் பிரித்தலும்
  பாதசாரிகள் நடைபாதைகளும் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் உள்ள நடைபாதைகளும்
  பிரதேச வீதிகளும் வீதிப்போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குறியீடுகளும்

  ஒரு தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர் யார்?
  கனடாவில் ஒரு தேர்தலில் வாக்களிப்பதற்கு, நீங்கள் கட்டாயம் வாக்களிக்கத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். நீங்கள் கனேடியப் பிரஜையாக இருந்து, தேர்தல் தினத்தில் குறைந்தது 18 வயதையுடையவராக இருப்பின் நீங்கள் வாக்களிக்கத் தகுதியுடையவராவீர்கள்.

  நிரந்தர வதிவுடையவர்கள் (குடியேறியவர்கள்), தற்காலிகமாக வசிப்பவர்கள், அகதி அந்தஸ்த்துக் கோருபவர்கள் ஆகிய எவரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

  நீங்கள் தேர்தலில் வாக்களிப்பதாக இருந்தால் (electoral district)ஒரு தேர்தல் மாவட்டத்தில் அல்லது (municipality) மாநகரத்தில் நீங்கள் கண்டிப்பாக வசிக்கவேண்டும். வீடு இல்லாத ஒருவராக நீங்கள் இருந்தால், அல்லது நிரந்தர வீட்டு விலாசம் இல்லாதவராக இருப்பினும் உங்களுக்கு வாக்களிக்க முடியும். தேர்தலுக்கு முன்பு 5 வாரகாலத்துக்குள்ளாக சாப்பிடவும் இரவு தங்கவும் ஆகக் கூடுதலாக சமூகமளித்த இடத்தை வைத்து உங்கள் விலாசம் தீர்மானிக்கப்படும். அல்லது அதே அளவுநேரம் மற்றொரு இடத்தில் நீங்கள் உணவருந்தி, படுக்கைக்கு வரும் இடமாக அது இருக்கலாம்.
  எந்த ஒரு தேர்தலிலும் நீங்கள் ஒரு முறை மட்டுமே வாக்களிக்கலாம்.
  (Municipal elections) மாநகர சபைத்தேர்தல்கள்
  (Municipal elections) மாநகர சபைத்தேர்தல்களில் நீங்கள் வாக்களிக்க கண்டிப்பாக:
  கனேடியப் பிரஜையாக இருக்கவேண்டும்.
  18 வயதுடையவராக அல்லது அதைவிடக் கூடிய வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
  வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள நகரத்தில் நீங்கள் வசிப்பவராக இருக்கவேண்டும், அல்லது அங்கு வசிக்கும் கணவராக அல்லது மனைவியாக அல்லது உடமையின் உரிமையாளர்களாக, தன்பாலினத் துணைவர்களாகவும் அல்லது நகரில் வேறு எங்கும் வாழாத குடியிருப்பாளர்களாகவும் இருக்கவேண்டும்.
  எந்த ஒரு சட்டத்தின் கீழும் வாக்களிப்பதற்குத் தடைசெய்யப்படாதவர்கள்.

  (School board trustee) பாடசாலை தர்மகர்த்தாக்கள் சபைத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, உள்ளூர் பாடசாலை சபைக்குக் கண்டிப்பாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சபையின் எல்லைக்குள், சபையின் எல்லையில் கண்டிப்பாக சொந்தமாக அல்லது வாடகைக்கு நீங்கள் வசிப்பவராக இருக்கவேண்டும், அல்லது அங்கு வசிக்கும் கணவராக அல்லது மனைவியாக அல்லது தன்பாலினத் துணைவர்கள் என்ற வகையில் உடமையின் உரிமையாளர்களாக அல்லது வாடகைக்கு வசிப்பவராக இருக்கவேண்டும். நீங்கள் ஒத்துழைப்பு நல்கும் சபை எது என்பது உங்களுக்கு நிச்சியமில்லாவிட்டால் அதை, (Voters' List)வாக்காளர் அட்டவணையில் சரி பார்க்கவும்.

  (Ontario provincial elections) ஒன்ராரியோ மாகாண தேர்தல்கள்
  (Provincial election) ஒன்ராரியோ மாகாண தேர்தலில் வாக்களிக்க நீங்கள் கண்டிப்பாக :
  கனேடியப் பிரஜையாக இருக்கவேண்டும்.
  தேர்தல் தினத்தன்று 18 வயதுடையவராக அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்.
  ஒருதேர்தல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும்.
  இந்த நிபந்தனைகளைப் பூரணப்படுத்தியிருந்தால் வாக்களிப்பதற்கு நீங்கள் தகுதிபெறுகின்றீர்கள். வாக்காளர் அட்டவணையில் உங்கள் பெயரைச் சேர்ப்பதன் மூலம் வாக்களிப்பதற்கு நீங்கள் கண்டிப்பாகப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். அப்போது (Notice of Registration card) பதிவுக் அட்டை அறிவித்தல் தபால் மூலமாக உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதை நீங்கள் தேர்தல் தினத்தில் (polling station) வாக்களிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

  ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிப்பதற்கு, வேலையில் இருந்து தொடர்ந்து 3 மணிநேரம் ஓய்வு கிடைக்கும். வாக்களிப்பு நேரங்களில் உங்களுக்கு சொந்தமாக 3 மணிநேரம் இருந்தால், உங்கள் வேலைதருணர் வாக்களிக்க உங்களுக்கு கால அவகாசம் தரவேண்டிய அவசியம் இல்லை. இருந்தபோதிலும் இம்முறை உங்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால், இக்குறித்த நேரத்தை வேலையிலிருந்து ஓய்வு தருமாறு வேண்டி நீங்கள் வேலைதருணரிடம் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் வேலைதருனர் வேண்டுகோளை அனுமதித்து அவர்களுக்கு வசதியான நேரத்தைத் தெரிவுசெய்யவேண்டும். தேர்தல் தினத்தன்று உங்களுக்கு வாக்களிக்க முடியாது போனால், (advance polls)முற்கூட்டிய வாக்களிப்பின்போது நீங்கள் வாக்களிக்கலாம். ( Notice of Registration card) உங்கள் பதிவு அட்டைஅறிவித்தலில், (advance polls) முற்கூட்டிய வாக்களிப்புக்காக நீங்கள் எங்குசெல்ல வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

  (Canadian federal elections) கனடாவின் மத்திய அரச தேர்தல்கள்
  கனடாவின் (federal election) பெடரல் - மத்திய அரச தேர்தலில் வாக்களிக்க நீங்கள் கண்டிப்பாக :
  கனேடியப் பிரஜையாக இருக்கவேண்டும்.
  தேர்தல் தினத்தன்று 18 வயதுடையவராக அல்லது அதற்குமேற்பட்டவராக இருக்கவேண்டும் .
  பொதுவாக தேர்தல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். இடைத் தேர்தலைப்பொருத்தவரை, தேர்தல் தினத்துக்கு முன்பு, 33 நாட்கள் கண்டிப்பாக நீங்கள் வசித்திருக்கவேண்டும்.

  இந்த நிபந்தனைகளைப் பூரணப்படுத்தியிருந்தால், வாக்களிப்பதற்கு நீங்கள் தகுதிபெறுகின்றீர்கள். வாக்காளர் அட்டவணையில் உங்கள் பெயரைச் சேர்ப்பதன் மூலம் வாக்களிப்பதற்கு கண்டிப்பாக நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  வாக்களிப்பதற்கு ஒவ்வொரு வாக்காளருக்கும் தொடர்ந்து 3 மணிநேரம் வேலையில் இருந்து ஓய்வு கிடைக்கும். வாக்களிப்பு நேரங்களில் உங்களுக்குச் சொந்தமாக 3 மணிநேரம் இருந்தால்,வாக்களிப்பதற்கு உங்கள் வேலைதருனர் உங்களுக்கு வாக்களிக்க கால அவகாசம் தரவேண்டிய அவசியம் இல்லை. இருந்தபோதிலும் இம்முறை உங்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால், இக்குறித்த நேரத்தை வேலையிலிருந்து ஓய்வு தருமாறு நீங்கள் வேலை தருனரிடம் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் வேலைதருனர் வேண்டுகோளை அனுமதித்து அவர்களுக்கு வசதியான நேரத்தைத் தெரிவுசெய்யவேண்டும்.

  ஆனால் உங்கள் பிரதான வதிவிடம் கனடாவில் இருந்து, தேர்தல் தினத்தன்று நீங்கள் கனடாவில் அல்லது வேறு எங்காவது உங்கள் தேர்தல் மாவட்டத்துக்கு வெளியில் இருக்கநேரிட்டால், (special ballot) விஷேட வாக்களிப்புக்கு நீங்கள் உங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம்.

  தேர்தல் தினத்தன்று உங்களுக்கு வாக்களிக்க முடியாது போனால், (advance poll) முற்கூட்டிய வாக்களிப்பின்போது நீங்கள் வாக்களிக்கலாம். முற்கூட்டிய வாக்களிப்புக்கான இடத்தை அறிந்துகொள்ள, தபால் மூலமாக உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் (Voter Information Card) பதிவு அட்டை அறிவித்தலைப் பார்க்கவும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
தொழில்நுட்பம்
இலக்கியம்
உலக சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort