சுவிட்சர்லாந்தில் Campsites-ன் விலை அதிகம்,
 • சுவிட்சர்லாந்தில் Campsites-ன் விலை அதிகம்,

  ஐரோப்பிய நாடுகளிலேயே சுவிட்சர்லாந்தில் தான் Campsites-ன்(இயற்கை சூழ்ந்த பகுதிகளில் முகாம் அமைத்து தங்குவது) விலை அதிகம் என தெரியவந்துள்ளது.

  இன்றைய காலகட்டத்தில் சொகுசு ஹொட்டல்களுக்கு சென்று விடுமுறையை கழிக்க விரும்புவோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, இயற்கை சூழ்ந்த பகுதிகளில் முகாம் அமைத்து இயற்கையை ரசித்தபடியே நேரத்தை செலவிடும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

  இதற்கான செலவும் குறைவு என்பதால், ஐரோப்பிய மக்கள் கடற்கரைக்கு அருகிலோ, மலைகள் சூழ்ந்த பகுதிகளிலோ தங்குகின்றனர்.

  இந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள முகாம்களிலேயே சுவிட்சர்லாந்தில் தான் ஒருநாள் தங்குவதற்கு ஆகும் செலவு அதிகளவு என சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

  ஜேர்மனியை சேர்ந்த ஆட்டோமொபைல் கிளாஸ் ADAC எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்துக்கு நேர் எதிராக ஜேர்மனியில் தான் குறைந்த விலையில் சுற்றுலா முகாம்கள் கிடைக்கிறது என பட்டியலிட்டுள்ளது.

  சுவிஸில் உள்ள முகாமில் ஒருநாள் இரவு தங்க சராசரியாக € 46.78 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும்.(இரண்டு பெரியவர்கள் மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன்/சிறுமி)

  இதற்கு அடுத்தபடியாக இத்தாலி €46.35, டென்மார்க் € 41.32 மற்றும் நெதர்லாந்து € 40.94 ஆகிய நாடுகள் உள்ளன.

  விலைமலிவான முகாம்கள் என பார்த்தால் ஜேர்மனி € 29.13 முதலிடத்தில் உள்ளது, ஸ்வீடன் € 31.11 மற்றும் ஆஸ்திரியா € 34.31 என இதற்கு அடுத்த இடங்களில் உள்ளன.

  எனினும் அதிக விலையை கட்டணமாக வசூலித்த போதிலும் சுவிட்சர்லாந்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அது பாதிக்கவில்லை.

  இதற்கு காரணம் சுவிட்சர்லாந்தில் உள்ள எழில்மிகு இயற்கை அமைப்பு தான் என தெரிவிக்கப்படுகிறது.

  ஒட்டுமொத்த சுவிஸ் முகாம்களுக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 11% அதிகரித்துள்ளது.

  அதாவது 3.1 மில்லியன் மக்கள் சுற்றுலா முகாம்களுக்கு வந்துள்ளதாக ஃபெடரல் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
உலக சட்டம்
தையல்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink