சுவிஸ் உளவுத்துறைக்கு தலைமையேற்கும் மூத்த இராணுவ வீரர்,
 • சுவிஸ் உளவுத்துறைக்கு தலைமையேற்கும் மூத்த இராணுவ வீரர்,

  சுவிஸ் உளவுத்துறையின் புதிய தலைவராக ஜீன் பிலிப் காடினை நியமித்துள்ளது சுவிஸ் அரசாங்கம்.

  56 வயதான காடின், ஆயுதப்படையின் உறுப்பினராக நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர், குறிப்பாக பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார், மேலும் 2008 மற்றும் 2016 க்கு இடையே இராணுவ புலனாய்வு பிரிவை வழிநடத்தியவர். பின்னர் பிரான்சில் சுவிஸ் தூதரகத்தில் இராணுவ இணைப்பாளராகவும் பணியாற்றினார்.

  புதனன்று ஒரு செய்தி மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சர் கய் பார்மெலின், சுவிட்சர்லாந்திலும் வெளிநாடுகளிலும் காடினின் தொழில்சார் அனுபவம் மற்றும் அவரது சர்வதேச தொடர்புகளின் நெட்வொர்க் ஆகியவற்றிற்காக அவரை பாராட்டினார்.

  ஜூலையில் அதிகாரப்பூர்வமாக தனது புதிய பதவியை ஏற்கவிருக்கும் காடின், இஸ்லாமிய பயங்கரவாதமே சுவிட்சர்லாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் மிக முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக விவரித்தார்.

  ஜேர்மனியில் உளவு நடவடிக்கைகளை துஷ்பிரயோகம் செய்ததற்காக பாராளுமன்ற கட்டுப்பாட்டு குழு உளவுத்துறையை கடுமையாக விமர்சித்துள்ள விஷயம் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக நடந்துவரும் பெரியளவிலான தரவு திருட்டு ஆகியவை குறித்து அறிக்கையில் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

  ஆனால் அவர் சேவை பணிகள் பற்றிய பொதுஅறிவை மேம்படுத்த முயற்சி செய்யப்போவதாக கூறினார், தற்போதைய ஊழியர்கள் அளவு போதுமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

  "மத்திய உளவுத்துறை சேவை தேவைப்படும் அனைத்தையும் கொண்டுள்ளது. ஆனால் எதிர்கால சவால்களுக்கு தகுந்தது போல் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், "என்று அவர் கூறினார்.

  கடந்த ஆண்டு வெளியுறவு அமைச்சகத்தில் மூத்த பதவி வகித்த மார்கஸ் சீலருக்கு பதிலாக காடின் வரவிருக்கிறார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
தங்க நகை
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்