ஜப்பானுடன் பொருளாதார மற்றும் விஞ்ஞானரீதியாக நெருக்கமடையும் சுவிட்சர்லாந்து,
 • ஜப்பானுடன் பொருளாதார மற்றும் விஞ்ஞானரீதியாக நெருக்கமடையும் சுவிட்சர்லாந்து,

  டோக்கியோவில் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலய்ன் பெர்செட் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில் ஸ்விஸ் நேஷனல் சயின்ஸ் பவுண்டேசனுக்கும் அதன் ஜப்பானிய சகாக்கும் இடையில் ஒத்துழைப்பை பலப்படுத்தும் ஆவணத்தில் சுவிட்சர்லாந்து கையெழுத்திட்டது.

  இந்த ஒப்பந்தம் இருதரப்பு விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று சுவிஸ் அரசு கடந்த வியாழக்கிழமை கூறியது. நோயாளிகள் பாதுகாப்பிற்கான உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பெர்செட், பல்வேறு நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

  பெர்செட் மற்றும் அபேக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கு இடையே 2009 முதல் இருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (FTA) நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வழிகளையும் கண்டன.

  சுவிட்சர்லாந்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் நிலையான அளவில் அதிகரித்து, சுவிஸ் ஏற்றுமதி கடந்த ஆண்டு CHF7.5 பில்லியன் ($ 7.8 பில்லியன்) எனும் அளவை அடைந்தது. மேலும், ஜப்பானில் இருந்து வரும் சரக்குகள் மொத்தம் CHF5.7 பில்லியனாக இருந்தது.

  FTA விளைவு

  FTA, சுவிட்சர்லாந்துக்கு ஜப்பானிய நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. FTA வருவதற்கு முன் சுவிட்சர்லாந்திற்கு ஜப்பானிலிருந்து வரும் நேரடி முதலீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, ஆனால் FTA வந்தபின் CHF630 மில்லியனில் இருந்து CHF5.6 பில்லியன் வரை உயர்ந்துள்ளது.

  பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் ஐரோப்பா மற்றும் ஆசியா இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை குறிப்பிட்டு காட்டியுள்ளனர், இதில் இந்த இரு கண்டங்களுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படவிருக்கும் சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியும் அடங்கும்.

  பெர்செட் மற்றும் அபே டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுக்களுக்காக முன்னேற்பாடுகள் பற்றியும் விவாதித்தனர். இதில் அல்பைன் மாகாணத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் "சுவிட்சர்லாந்தின் வீடு" திட்டம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
இலக்கியம்
சட்டம்
சினிமா
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort