சுவிட்சர்லாந்தில் 2016 ல் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளிப்பாடு அதிகம்,
 • சுவிட்சர்லாந்தில் 2016 ல் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளிப்பாடு அதிகம்,

  சுவிட்சர்லாந்தில் 2016 ல் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளிப்பாடு சிறிது உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அலுவலகம் கூறுகிறது. குளிர்கால வெப்பநிலையே அதிகரித்த ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

  2016 ஆம் ஆண்டில் கார்பன் டை ஆக்சைடு சமன்பாடு (வெவ்வேறு கிரீன்ஹவுஸ் வாயுக்களை விவரிக்கும் பொதுவான அலகு) வெளிப்பாடு 0.4 மில்லியன் டன்கள் உயர்ந்து 48.3 மில்லியன் டன்னாக இருந்ததாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

  இந்த புள்ளிவிவரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் செயலகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் கிரீன்ஹவுஸ் வாயு இருப்பில் (1990-2016) இருந்து எடுக்கப்பட்டன. இது சுவிஸ்ஸின் கிரீன்ஹவுஸ் உமிழ்வு பற்றிய ஒரு தெளிவை கொடுக்கிறது, இது ஐ.நாவின் கியோட்டோ நெறிமுறை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

  கியோடோவின் குறிக்கோள், 2013-2020 காலப்பகுதியில் அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களின் மொத்த உமிழ்வுகளின் சராசரி குறைப்பு 1990 களோடு ஒப்பிடும்போது 15.8% ஆக குறைந்திருக்க வேண்டும் என்பதே.

  கிரீன்ஹவுஸ் வாயுக்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக 15.3 மில்லியன் டன் CO2 உமிழ்வுடன் போக்குவரத்துதுறை முதலிடத்தில் உள்ளது. இது 1990 இல் இருந்த போக்குவரத்து உமிழ்வைவிட 3% அதிகமாகும், இது ஒரு முக்கிய குறியீடாக (மற்றும் மீறப்படக்கூடாத குறியீடாக) இருக்கிறது.

  சுற்றுச்சூழல் அலுவலகம், 2008 ஆம் ஆண்டு முதல் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கான CO2 உமிழ்வு வீழ்ச்சியுற்றிருப்பதாக கூறியது.

  13.2 மில்லியன் டன் CO2 உமிழ்வுடன் கட்டடங்கள் இரண்டாவது பெரிய உமிழ்வு ஆதாரங்களாக இருக்கின்றன. இது 1990 ஆம் ஆண்டின் நிலையான அளவைக் காட்டிலும் 23% குறைவு. இந்த உமிழ்வுகள் 2005 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்துள்ளன, ஆனால் அந்த அளவு குளிர்காலத்தைப் பொறுத்து, எவ்வளவு வெப்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் பெரியளவில் வேறுபடுகிறது என சுற்றுச்சூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது. "இந்த வேறுபாடுகள் கட்டிடத்துறை இன்னும் எந்த அளவிற்கு படிம எரிபொருள்களை சார்ந்துள்ளது என்பதன் அடையாளம் ஆகும்," என்று அறிக்கை கூறியது. "குளிர் வெப்பநிலை காரணமாக, கட்டிட உமிழ்வு முந்தைய ஆண்டை விட 2016 ல் 3.6% உயர்ந்தது."

  ஆனால் தொழில்துறை மற்றும் விவசாயத்தில் இந்த அளவுகளில் பெரியளவில் வித்தியாசம் காணப்பட்டது. தொழில்துறை உமிழ்வுகள் 1990 ஆம் ஆண்டு நிலையை விட 16% குறைந்து 10.9 மில்லியன் டன் CO2 ஆக இருந்தது. விவசாயத்தில் 6.5 மில்லியன் டன் CO2 , 1990 ல் இருந்ததை விட 10% குறைவாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு துறைகளிலும் உமிழ்வு நிலையானதாக இருந்தது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக சட்டம்
தங்க நகை
தமிழகச் செய்திகள்
சட்டம்
 மரண அறித்தல்