சிரியா மீது அமெரிக்க கூட்டுப் படை ஏவுகணைத் தாக்குதல்,
 • சிரியா மீது அமெரிக்க கூட்டுப் படை ஏவுகணைத் தாக்குதல்,

  சிரியாவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படை சனிக்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. அதிபர் பஷார் அல் அஸாத்தின் ஆட்சிக்கு எதிராகவும், அவரது படைகளிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

  அத்துடன், சிரியா அரசின் ஆதரவு நாடுகளான ரஷியாவையும் ஈரானையும் எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கருப்புப் பாதையில் பயணிப்பதை விடுத்து, அமைதியை விரும்பும் நாடுகளுடன் கைகோக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

  ரசாயன ஆயுதங்களை அழிக்க..: சிரியா அரசு படைகளிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் வடக்கு, கிழக்கு எல்லைப் பகுதிகளில் அமெரிக்க கூட்டுப் படை சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

  இதுதொடர்பாக, தலைநகர் டமாஸ்கஸில் தங்கியிருக்கும் சர்வதேச செய்தியாளர்கள் கூறுகையில், "உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு, அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தமும், அதையடுத்து போர் விமானங்கள் பறந்து செல்லும் சப்தமும் கேட்டதாகக் கூறினர்.

  இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜோசப் டன்ஃபோர்ட் கூறுகையில், டமாஸ்கஸ் மற்றும் ஹாம்ஸ் நகரங்களிலுள்ள ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு உதவக் கூடிய அறிவியல் சோதனை மையம், அத்தகைய ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய கிடங்குகள் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

  100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீச்சு?: இதுதொடர்பாக, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:

  சிரியாவில் ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தின. எனினும், அவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க, ரஷிய வான்பாதுகாப்புத் தளவாடங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது.

  இதனிடையே, இந்த ஏவுகணை வீச்சுக்கு எதிராகவும், அரசுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் சிரியா கொடியை ஏந்தியபடி ஏராளமானோர் நகரின் மையப் பகுதியில் குழுமினர்.

  சிரியாவில் கடந்த 2012-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அப்போது முதல் இப்பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

  இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடமிருந்து அந்தப் பகுதியை மீட்கும் முயற்சியாக, கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, கிழக்கு கெளட்டாவில் 30 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.

  இந்தச் சூழலில், மற்ற பகுதிகளில் இருந்து கிளர்ச்சிப் படையினர் வெளியேறிய நிலையில், கிழக்கு கெளட்டா பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான டூமாவில், தீவிரப் போக்கைக் கடைப்பிடித்து வரும் சில கிளர்ச்சிக் குழுக்கள் தங்கள் நிலைகளை விட்டுக் கொடுத்து வெளியேற மறுத்து வந்தன.

  இதையடுத்து, அந்தப் பகுதியில் சிரியா படையினர் மீண்டும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தினர்.

  இந்தச் சூழலில், சிரியா படையினர் டூமா நகரில் கடந்த 7-ஆம் தேதி ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்ததாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

  இத்தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.

  ரசாயனத் தாக்குதல் குறித்த தகவலை ரஷியாவும், சிரியாவும் திட்டவட்டமாக மறுத்து வந்தாலும், அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

  அத்தகைய தாக்குதல் நடந்தால் அமெரிக்கா கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ரஷியாவும் எச்சரித்தது.

  இந்தச் சூழலில், சிரியா ராணுவ நிலைகள் மீது அமெரிக்க-பிரிட்டன்-பிரான்ஸ் கூட்டுப் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  கிழக்கு கெளட்டா பகுதியைச் சேர்ந்த டூமா நகரில், சர்வாதிகாரி அல்-அஸாத் அரசு நடத்திய ரசாயன தாக்குதல், அந்த நாட்டு அரசு ரசாயன ஆயுத பலத்தைப் பெருக்கி வருவதை பறைசாற்றியுள்ளது. அஸாத் படைகளின் ரசாயன ஆயுத பலத்தை அழிக்கும் வகையிலேயே, குறிப்பிட்ட இடங்களை குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  - டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர்

   

  சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தியதன் மூலம், அமெரிக்க கூட்டுப் படைகள் தங்கள் அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல், சிரியாவில் ஒரு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது ஆகும். சர்வதேச நல்லுறவுக்கும் இந்தத் தாக்குதல் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

  - விளாதிமீர் புதின், ரஷிய அதிபர்


  அமெரிக்கா, பிரான்ஸூடன் இணைந்து சிரியாவில் பிரிட்டன் மேற்கொண்ட தாக்குதல், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சர்வதேச சமுதாயம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பதை உணர்த்தியிருக்கிறது.

  - தெரசா மே, பிரிட்டன் பிரதமர்

   

  சிரியாவின் மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதலால் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட வேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை இந்தத் தாக்குதல் மேலும் அதிகரித்திருக்கிறது.

  -அல்-அஸாத், சிரியா அதிபர்


  ரஷியா மற்றும் ஈரான் நாடுகளின் உதவியுடன், மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை சிரியா அரசு இழப்புகள் எதுவுமின்றி இனியும் தொடர முடியாது என்பதை அமெரிக்க கூட்டுப் படையின் ஏவுகணைத் தாக்குதல் உணர்த்தியுள்ளது. நீதியைக் காப்பதற்காக ஐரோப்பிய யூனியன் கூட்டுப் படைக்கு பக்கபலமாக இருக்கும்.

  - டொனால்ட் டஸ்க், ஐரோப்பிய யூனியன் தலைவர்

   


  அவசரமாக கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்,

  சிரியா மீது அமெரிக்கா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ரஷியாவின் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

  சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார்.

   அதன்படி, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு  வான்படைகள் தாக்குதல் நடத்தின. அமெரிக்காவின் குண்டு மழையால் டமாஸ்கஸ் நகரம் குலுங்கியது.  சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது.

  இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, (இந்திய நேரப்படி) இன்றிரவு 8.30 மணியளவில் அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
இலங்கை சட்டம்
மருத்துவம்
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort