இலங்கையில் விசேட வருமான வரி அறிமுகம் வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு,
 • இலங்கையில் விசேட வருமான வரி அறிமுகம் வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு,

  இலங்கையில் இன்று முதல் வருமான வரி அறவிடும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி குறித்த சட்டங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்பட உள்ளன.

  இதன்படி, வருடாந்த வருமானம் 7.5 லட்சம் ரூபா என்ற எல்லை நிர்ணயம் 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  வருடாந்த வருமானம் 12 லட்சத்திற்கும் அதிகமான முதல் 6 லட்சத்திற்கு 4 வீதமும், அதன் பின்னர் அதிகரிக்கப்படும் ஒவ்வொரு ஆறு லட்சத்திற்கும் முறையே 8, 12, 16, 20 மற்றும் 24 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

  இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 16 வீத வரியே அறவீடு செய்யப்பட்டிருந்தது.

  இதற்கு மேலதிகமாக வருடாந்த வருமானம் 25.5 மில்லியனுக்கும் அதிக பெறுபவர்களுக்கு இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட வரி வீதம் 12 லிருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  இது பெரும்பாலும் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளை அதிகளவில் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  ஒருவர் தனக்குச் சொந்தமான இரண்டாவது வீட்டை விற்பனை செய்யும் போது முதலீட்டு வரியாக 10 வீதம் அறவீடு செய்யப்பட உள்ளது.

  வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் உள்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யும் பணத்திற்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

  எனினும், வெளிநாட்டில் பணி புரிவோர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணத்திற்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

  சிரேஸ்ட பிரஜைகளின் 15 லட்சம் வரையிலான வைப்புக்களுக்கான வட்டிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக தொகைக்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

  வரிச் சலுகை மற்றும் வரி விடுதலை வழங்குவதற்கு நிதி அமைச்சருக்கு காணப்பட்ட 200 சந்தர்ப்பங்கள் புதிய சட்டத்தின் ஊடாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
சினிமா
வினோத நிகழ்வுகள்
தொழில்நுட்பம்
 மரண அறித்தல்