பெரும் குழப்பத்தில் சுதந்திரக் கட்சி,
 • பெரும் குழப்பத்தில் சுதந்திரக் கட்சி,

  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

  தேசிய அரசாங்கம் என்ற பரிசோதனை தோல்வியடைந்துள்ளதாகவும் இதனால், ஐக்கிய தேசியக்கட்சியின் தனியான அரசாங்கத்தை அமைக்க இடமளித்து விட்டு தாம் உட்பட தமது தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிஇ எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது நாங்கள் அரசாங்கத்தில் இருந்து விலகியது போல்இ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள்.

  நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஏனைய 26 பேரும் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் அல்லது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முழுமையாக அரசாங்கத்தில் இருந்து விலகினால்இ எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன் 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவையுடன் பிரதமரும் நியமிக்கப்படுவார். அதேபோல் ஏனைய கட்சிகளிலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
ஆன்மிகம்
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink