பற்கள் எப்படி இருக்கிறது? சொல்கிறது உங்களது ரகசியம்,
 • பற்கள் எப்படி இருக்கிறது? சொல்கிறது உங்களது ரகசியம்,

  மனிதர்களின் உடல் அமைப்பு, மூக்கு வடிவம், கை விரல்கள் அமைப்பு, நாக்கு போன்றவற்றை வைத்து அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள், மன ரீதியான செயற்பாடு எப்படி இருக்கும் என கூறப்படுகிறது

  இது ஒரு பெர்சனாலிட்டி டெஸ்ட் (Personality Test), அந்த வகையில் உங்கள் பற்களின் அமைப்பை வைத்து குணாதிசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

  சதுரம், வட்டம், முக்கோணம் மற்றும் செவ்வகம் என நான்கு வகை பற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  சதுர வடிவிலான பற்கள்

  அன்பான இதயம் கொண்டவர்கள். பிறர் மீது அன்பு காட்டுவதிலும், அன்பை எதிர்பார்ப்பதிலும் முனைப்புடன் இருப்பீர்கள். உங்களை ஒருவர் காயப்படுத்தினால் கூட அதனை பொருட்படுத்தாது, மீண்டும் அவர்களோடு அன்பாக இருப்பீர்கள். நீங்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள் என்பதால், மற்றவர்கள் உங்களிடம் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவார்கள்.

  வட்ட வடிவிலான பற்கள்

  அற்புதமான இதயம் கொண்டவர். உங்கள் வாழ்வில் ஏற்படும் கடினமான சூழ்நிலைகளையும் புன்னகையால் எதிர்கொள்வீர்கள், உங்களது வாழ்க்கையை முழுக்க முழுக்க உங்கள் திட்டமிடுதலில் வாழவேண்டும், பிறர் கூறும் விடயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. உங்கள் வாழ்க்கையில் அதிக எதிர்மறைகள் வந்தாலும், பிறர் கூறும் கருத்துக்களுக்கு செவிசாய்க்க கூடாது.

  முக்கோண வடிவ பற்கள்

  இந்த பற்கள் சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், பிறர் மத்தியில் ஈர்ப்பாக இருப்பீர்கள். தீவிர சிக்கல்களையும் எதிர்கொள்ளும் நீங்கள், மிகவும் பிரபலமானவராக இருப்பீர்கள்.

  செவ்வக வடிவ பற்கள்

  மிகவும் நேர்மையானவரான நீங்கள், மற்றவர்களிடம் அன்பு செலுத்தினால் அதனை மற்றவர்களும் உங்களுக்கு தரவேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது. உங்களை பிற நபர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
சிறுவர் உலகம்
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்