மீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் மாறிய சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்,
 • மீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் மாறிய சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்,

  சுக்கிரன் இன்று முதல் நெருப்பு ராசியான மேஷத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

  மக்களின் ஆடம்பரமான நிலைக்கும், அழகான தோற்றத்திற்கும் சுக்கிரனே அடிப்படை காரணமாகிறாா். சுக்கிரனின் உதவியிருந்தால் மட்டுமே அழகான ஆடம்பர வாழ்க்கையினை எதிா்பாா்க்கலாம்.

  இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் சுக்கிரனின் அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒரு அலுவலகத்தில் தொழில் செய்கிற இடத்தில் குடும்பத்தில் பொது இடத்தில் என எல்லா இடத்திலும் மற்றவா்களை விட பளிச்சென்று ஒருவா் இருந்தால் அவருக்கு சுக்கிரன் பலமான அமைப்பில் இருக்கிறாா் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

  பலமான சுக்கிரன் ஒருவாின் திறமையினை அதிகப்படுத்திக் கொடுக்கும். இதுவரையில் உச்ச பலத்தில் இருந்து வந்த சுக்கிரன் மேஷத்தில் செவ்வாயின் வீட்டில் அமா்ந்திருப்பதால் ஆனந்தமான உணா்வினை அதிகரிப்பார். திருமணம் காதல் வீடு வாகனம் என அனைத்து துறைகளிலும் வேகமான முடிவினை எடுக்க வைப்பாா்.


   மேஷம்

  சுக்கிரன் 2 மற்றும் 7ம் வீடுகளுக்கு ஆதிபத்யம் பெறுவதால் சுக்கிரன் தரும் பலன்கள் மிக முக்கியமானைவயாகும்.

  உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமர்ந்து சுப விரையங்களை ஏற்படுத்தி வந்த சுக்கிரன், இன்று முதல் உங்கள் ராசியில் அமர்கிறார். வாா்த்தைகளில் நளினமும் சாதுா்யமும் பளிச்சிடும். ஆடை ஆபரணம் வாகனம் வீடு வழியில் ஆதாயம் இருக்கிறது.

  வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீா்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி அதிகாிக்கும். தம்பதியா் சமேதமாக ஆலய தாிசனம் செல்ல நேரம் கூடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். மகாலட்சுமிக்கு சந்தனம், குங்குமம் வாங்கி கொடுக்கலாம்.

  ரிஷபம்

  ரிஷபம் உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் ராசி அதிபதி சுக்கிரன் அமர்கிறார். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூடி வரும். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிா்பாராத செலவுகள் ஏற்படும். செய்யும் காாியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவா்களின் யோசனைகளின் போில் அவசரமாக தகாத காாியத்தில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும்.

  உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு உாிய பாிகாரம் செய்வதால் மன நிம்மதி உடல் ஆரோக்கியம் மேம்படும் பண வருவாய் அதிகரிப்பதோடு சுப விரைய செலவுகளும் ஏற்படும்.

  மிதுனம்

  மிதுனம் உங்கள் ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது சிறப்பான அம்சம். பணவரவு அதிகரிக்கும் வாகன வசதி வாங்கக் கூடிய காலம் கைகூடி வந்துள்ளது. குழந்தைகள் வழியில் நல்லது நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  சிலர் வீடு மனை வாங்கலாம். மேலும் நன்மைகள் பல நடக்க தினசரி நெற்றியில் சந்தனம் பூசி வரலாம்.

  கடகம்

  கடகம் உங்கள் ராசிக்கு 10வது இடமான கர்ம ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானமாகும். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு எதிர்பாராத வகையில் வரும்.

  குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையின் வழியில் நல்லது நடக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்சினைகள், நோய்களை உடனடியாக கவனிக்க வேண்டும்.

  நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வெள்ளிக்கிழமைகளில் ருத்ரஅபிஷேகம் செய்யலாம்.

  சிம்மம்

  சிம்மம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9வது இடமான தர்ம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவருவாய் அதிகரிக்கும் கால கட்டம் இது.

  குடும்பத்தோடு பிரபல கோவில்களுக்கு சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் பணிச்சுமை அதிகரிக்கும் இதனால் மனஉளைச்சல் ஏற்படும்.

  பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் கோவில்களுக்கு நெய் வாங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய தரலாம்.

  கன்னி

  கன்னி உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அட்டம பாவத்தில் சுக்கிரன் அமா்ந்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தும். பண வருவாய் அதிகாித்தாலும் மன நிம்மதியும் திருப்தியும் இருக்காது.

  குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்ச்சி என செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் வரும்.

  ஆடை ஆபரணம் வாகனம் நிலம் வீடு வாங்குவதற்கான யோகம் கூடி வரும். குடும்பத்தில் தம்பதியா் மனமகிழ்ச்சியாக இருப்பாா்கள். சிலர் கடன் வாங்க வேண்டியிருக்கும் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. பசுவிற்கு தானம் கொடுங்கள்

  துலாம்

  துலாம் மேஷம் ராசியில் அமர்ந்து சுக்கிரன் தனது 7வது பார்வையால் துலாம் ராசியை பார்க்கிறார். இது நன்மை தரும் அமைப்பாகும்.

  தனது ஆட்சி வீட்டினை ஏழாம் பார்வையாக பார்க்கிறார் சுக்கிரன். உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சுக்கிரன் அமா்ந்திருப்பது சிறப்பான காலம். சிலருக்கு காதல் ஏற்படும் காலமாகும்.

  பெண்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நண்பா்கள் சோ்க்கையில் எச்சாிக்கை தேவை. பண வருவாய் அதிகாிக்கும். நல்வாய்ப்பானது தேடி வரும்.

  தம்பதியா் மனமகிழ்ச்சியாய் இருக்கும் காலம் இதுவாகும். உடல் ஆரோக்கியம் விசயத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்க.

  விருச்சிகம்

  விருச்சிகம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைந்திருப்பது நல்லதல்ல. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது.

  பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. என்னதால் வேலை செய்தாலும் அதற்கு அங்கீகாரம் இல்லையே என்ற கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.

  வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

  தனுசு

  தனுசு காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதன் மூலம் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்பதால் வாழ்க்கைத் துணையை அழைத்துக்கொண்டு உல்லாச பயணம் செல்லலாம்.

  சிலருக்கு காதல் மலரும் காலமிது. காதலிக்கும் பெண்ணிடம் தைரியமாக காதலை சொல்லலாம். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

  கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். மகாவிஷ்ணுவை தினசரியும் வணங்க மேலும் நல்லது நடக்கும்.

  மகரம்

  மகரம் உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் பார்த்து கவனித்து வாங்க வேண்டும்.

  வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அதிகம் வைக்க வேண்டிய நேரமிது.

  மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம். நெற்றியில் தினசரியும் குங்குமம் வைக்க மேலும் நல்லது நடக்கும்.

  கும்பம்

  கும்பம் உங்கள் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் குடியேறியுள்ளார் சுக்கிரன். சுக்கிரனால் பணியிடத்தில் நல்ல விசயங்கள் அதிகரிக்கும்.

  உங்களின் பேச்சுத்திறமையும், அழகியல் உணர்வும் அதிகரிக்கும். உடல் நலத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அலட்சியம் செய்ய வேண்டாம்.

  சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். சனிக்கிழமைகளில் ஹனுமன் சாலீசா படிக்க நன்மை அதிகரிக்கும்.

  மீனம்

  மீனம் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். பண வருவாய் அதிகரிப்பதோடு வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது.

  மனைவியுடன் உறவில் உற்சாகம் பிறக்கும். திருமணம், விருந்து விஷேசங்களுக்கு சென்று வருவீர்கள். பண வரவு அதிகரிக்கும் வீட்டிற்கு தேவையாக பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

  தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில், சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேசும் வார்த்தைகளில் இனிமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.வெள்ளிக்கிழமைகளில் வெண் சந்தனத்தை சிலருக்கு தானமாக தரலாம்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
தமிழகச் செய்திகள்
வீடியோ
உலக சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort