அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழ தமிழினம்,
 • அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழ தமிழினம்,

  இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 30வருடங்களுக்கு மேலாக மாவீரர்,போராளிகளது வியர்வையாலும், ரத்ததாலும் தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது??

  இதற்கு பின்னால் கண்ணுக்கு தெரியாத பெரும் சதி வலைகள் பின்னப் பட்டிருந்தது. முக்கியமாக இருபதற்கு மேற்பட்ட நாடுகளின் கரம் நீண்டிருந்தது. இது பற்றிய ஒரு நேரிய பாதை எம் இளைய சந்ததிக்கு தோன்ற வேண்டும் என்பதால் எமது அழிவுக்கான காரணங்களை உங்களோடு பகிர விளைகின்றேன்.!

  நாம் விட்ட தவறை சரியாக இனம் கானது விட்டால் மீண்டும் இது போன்ற தோல்வியை நாம் சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை.!

  2003இல் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, மறுபக்கத்தில் 2003இல் முதலாவது புலிகளின் கப்பல் எதிரியால் தாக்கி அழிக்கப் பட்டது. அதன் பின்பும் 2 கப்பல்கள் தாக்கி அழிக்க பட்டது. இதில் சிங்கள அரசின் சாதனை போல தெரிந்தாலும் உண்மை அதுவல்ல.

  2002இன் பின் கனேடிய நிறுவனம் ஒன்றின் ஊடாக satilite அலைபேசிகள் வாங்கப்பட்டது. வாங்கிய சற்றலைட் அலைபேசிகளையே புலிகள் தமது கடல்சார் நடவடிக்கைக்கும் அதனோடு சம்பத்தப் பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தினர்.

  இந்த வசதி இலவுவாக இருந்தமையாலும், இதை எதிரி “ட்ரக் பண்ண அடி இலக்கம்” அவனுக்கு தெரியாது என்னும் துணிவில் பரவலான பாவனையில் இருந்தது. இதை எப்படியோ கனேடிய உளவுத்துறை மோப்பம் பிடித்து விட்டிருந்தது. (பெரும்பாலும் CIA கண்ணை காட்டி இருக்கலாம்) அவர்கள் அந்த இலக்கங்களை பெற்று எதிரியின் உளவுத்துறையான SIS க்கு (இதன் பழைய பெயர் NIV) 2003இல் கொடுத்து விட்டது.

  இதை தொடர்ந்து அவர்கள் எங்களை ஒசைபடாது “மொனிடர்”பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதன் ஒரு அங்கமாக தான் கனடாவின் துரோகத்தால் 2003இல் முதல் கப்பலும், அதை தொடர்ந்து இரண்டு கப்பலும் அழிக்க பட்டது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் லண்டன் நிறுவனம் ஒன்றின் ஊடாகவும் தொலைபேசிகள் வாங்கப்பட்டது.

  அவையும் MI5 மோப்பம் பிடித்து அதையும் எதிரிக்கு கொடுத்திருந்தது. தொலைபேசி கொள்முதல்கள் நடக்கும் போது பொதுவாக எந்த உளவுத்துறைகளும் தடுப்பதில்லை. காரணம், பின்னர் தேவைப்படுமிடத்து அடி இலக்கம் பெற்று மொனிட்டர் பன்னுவதற்கு இலகுவாக இருக்கும் என்பதே.!

  இப்படி இருக்கும் போது 2006இல் நோர்வேயில் வைத்து பேச்சு வரத்தை முறிவுண்டபின், நோவேயால் எச்சரிக்க பட்டு எமது பேச்சு வார்த்தை குழு நாடு திரும்பியது. நோவேயின் எச்சரிக்கை அமெரிக்காவின் எச்சரிக்கையே.! நோர்வேயின் பின்னால் இருந்தது அமெரிக்கா என்பது ஊர் அறிந்த ரகசியம்.

  அமெரிக்காவின் இரட்டை கோபிர தாக்குதலின் பின் விடுதலை அமைப்புகள் குறிப்பாக தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளும் அமைப்புகள் தடை செய்த பின் எம்மை கண்காணிக்கவென புதிய இலாகா ஒன்று உருவாக்க பட்டு, 24 மணி நேரம் கண்காணிக்க பட்டு, எமது பலம், பலவீனம் ஆராயப்பட்டு கொண்டிருந்தது. அப்போது CIA இன் கழுகு பார்வை எங்கள் மேல் விழுந்திருந்தது.

  இது இப்படியே இருக்கும் போது 2006இல் சண்டை ஆரம்பமானவுடன் சர்வதேசம் ஒதுங்குவதாக வெளியில் கூறியது. சண்டை ஆரம்பமானவுடன் எமக்கு வெற்றியை தீர்மானிக்க வேண்டிய நேரத்தில், ஆயுதங்களுடன் சர்வதேசக்கடலில் தரித்து நின்ற நான்கு “கார்கோ” கப்பல்களை இந்து சமுத்திரத்தில் இகுவேட்டர் கோட்டோடு வைத்தே, சர்வதேச விதிமுறைகளை மீறி தாக்கி அழித்தான் எதிரி.! அத்தோடு எமக்கான ஆயுத வளங்கள் இல்லாது போனது.!

  இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் பற்றியும், சிங்கள அரசின் “வெளி தொடர்பு” பற்றியும் தகவல் திரட்டும் படி அண்ணையாள் பணிக்கபட்டு தமிழர் உளவமைப்புகள் களத்தில் இறக்கி விடப் பட்டது. சரியான தகவல் எமக்கு கிடைக்கும் போது எல்லாம் எம் கையை விட்டு போயிருந்தது.

  எதிரிக்கு தெரிந்த பின் எதுவும் ரகசியம் என்று இங்கு இல்லை . அத்தோடு புலிகளின் ஆயுத வளங்கள் வலையமைப்பும் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதது. எதிரியால் இது எப்படி சாத்தியமாச்சு என்று ஒரு குழப்பம் எமக்கு இருந்தது ,உங்களுக்கும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.

  இதை தெரிந்து கொள்ள புலிகளின் ஆயுத “நெட்வொர்க்” எப்படி இயங்கியதென்று நீங்கள் அறிய வேண்டும்.

  அந்த நேரத்தில் புலிகளால் இந்தோனேசிய தாய்லாந்து போன்ற நாடுகளே தளமாக பயன் படுத்தப் பட்டது. இதில் இந்தோனேசியாவில் தான் ஆயுதம் தவிர்ந்த பொருட்கள் களஞ்சிய படுத்த பட்டது. கப்பல் மாலுமிகள் தங்குவதும் அங்கு தான்.

  ஆயுதங்கள் அங்கு வைத்து ஏற்றபடுவதில்லை. அதனால் இந்தோனேசிய அரசாங்கமும் இதை கண்டுகொள்வதில்லை. அதனால் மருந்து பொருட்கள் உதிரிபாகங்கள் அது போன்ற பொருட்கள் அங்கேயும், தொலை தொடர்புகருவிகள் மலேசியாவிலும், கடற்புலிகலுக்கான வெளியிணைப்பு இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், கதுவிகள் (radar) போன்றவை ஜப்பானிலும் வாங்கி இங்கு கொண்டுவந்து களஞ்சியப் படுத்தப் படும்.

  இந்த பொருட்களை “கார்க்கோ” கப்பலில் ஏற்றிய பின் கப்பலை வெளியில் கொண்டு செல்வதற்கு இந்தோனேசிய கஸ்டம் அதிகாரிகலாள் கிளியரன்ஸ் கொடுக்கப்படும். அங்கிருந்து வடகொரியா சென்று (இறுதி நேரத்தில் அவர்களே ஆயுதங்கள் சப்ளை செய்தார்கள்) ஏற்றும்.

  ஆயுதங்களுடன் “கார்கோ கப்பல்” புறப்படும். (இதற்கான பணத்தை தாய்லாந்தில் வைத்து அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றபடும்) சிலவேளைகளில் கொரியர்கள் கடலில் வைத்து ஆயுதங்களை மாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளது. இது நிலைமைக்கு ஏற்றால் போல மாறும்.

  இந்த நடைமுறையை உலகம் பூராவும் முகவர்களை பரப்பியுள்ள CIA கண்டு பிடித்திருந்தது. (சில வேளை இந்தோ அரசாலும் சொல்ல பட்டிருக்கலாம்) அதன் பின்பு எமது கப்பல் நடமாட்டங்களை சற்றலைட் கண்காணிப்பில் கொண்டு வந்தது CIA. இதன் பின் இந்த பொருட்கள் எப்படி ஊர் போய் சேர்ந்தது?

  புலிகளின் ஆயுத வளங்கள் மூன்று பிரிவாக நடக்கும். முதலாவது “கார்கோ” கப்பல்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டு இந்து “சமுத்திரத்தில் இகுவேட்டர் கோட்டோடு” வந்து நிக்கும்.

  இரண்டாவதாக எங்களது “டேங்கர் கப்பலளுக்கு”மாற்றப்படும் (ஒரு கார்க்கோ கப்பலில் வரும் பொருட்கள்,7இல் இருந்து 10 டேங்கர் கப்பல்களில் ஏற்றப்படும்) இந்த கப்பல்கள் கிழக்கு கரைகளில் இருந்து (மட்டக்களப்பு) 300கடல் மைல்களுக்கு அப்பால் தரித்து நிக்கும்.

  மூன்றாவதாக கடற்புலிகளின் வினியோக படகுகள் மற்றும் பெரிய மீன் பிடி றோலர்களின் அவை ஏற்றபட்டு கரையை அடையும். இதுவே நடை முறையாக இருந்தது.!

  இதில் உள்ளதை பார்க்கும் போது எதோ கடையில் போய் பொருட்கள் வாங்குவது போல இலவுவாக தெரியும் நிச்சயமாக அது அப்படி இருக்காது. இதற்கு பின்னால் பல நூறு போராளிகள், மக்களின் தியாகங்கள் நிறைந்துள்ளது.
  (கீழே “கார்கோ” மற்றும் “டேங்கர்” ரக கப்பல் படங்களை பார்க்கவும்)

  இப்படி இருக்கும் போது இதற்கு முன்னரான காலங்களில் “டேங்கர் “ரக கப்பல்களே தாக்குதல்களில் சிக்கியிருந்தது. அதாவது ஒரு மரத்தின் கிளையை வெட்டுவது போன்றது. அது வெட்டப்பட்டாலும் உடனேயே அந்த இடத்திற்கு புதிதாக இன்னொன்று வந்து விடும்.

  அப்போது தான் ஒரு பெண் அதிகாரியின் தலைமயில் நான்கு பேர் கொண்ட CIA அதிகாரிகள் ஸ்ரீலங்கா வந்து கடல்படை அதிகாரி வசந்த கர்னகொடவை சந்தித்து, எதிரிக்கு அதுவரை தெரியாத, புலிகளின் ஆயுத வளங்களின் பின்னணி பற்றியும், நடைமுறைகள் பற்றியும் விளக்கி கூறியுள்ளார். அதுவரை புரியாது இருந்த பல முடிசுகள் சிங்கள அரசுக்கு அவிழ்ந்து போனது.

  அதன் போது, புலிகளின் ஆயுத வழங்களின் மரமான “கார்க்கோ கப்பல்கள்” தரித்து நிற்கும் இடத்துக்கான “சற்றலைட்” படங்களை கொடுத்து (இந்த படங்களின் பிரதிகள் புலிகளின் உச்ச புலனாய்வின் ஊடாக பெறப்பட்டு தலைவருக்கு கொடுக்கப்பட்டது) நான்கு கப்பல்களையும் இனம் காட்டி கொடுத்திருந்தது. அத்தோடு தமது செய்மதியில் தொடந்து கண்காணித்து வருவதையும் கூறி,அதை அழிப்பதற்கான பொறிமுறையையும் உருவாக்கி கொடுத்தது.

  சர்வதேச கடலில் ஒரு கப்பலை தேடுவது என்பது வைக்கோல்போரில் குண்டூசியை தேடுவது போன்றது. ஒரு கப்பல் புறப்படும் இடத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்கானித்தால் மட்டுமே அதை இனம் காண முடியும். சர்வதேச கடலில் ஆயிரகணக்கில் கப்பல்கள் நடமாடும், அதனால் இந்த தாக்குதலுக்கு, சிங்கள அரசால் உத்தியோக பூவமாக CIA இன் உதவி கோரப்பட்டது.

  அதன் படி அவர்களின் சற்றலைட் உதவியுடன் எதிரியின் நான்கு சண்டை கப்பல்கள் புறப்பட்டது. (சயூரா-p 714,சமுதுரா p-621,சக்தி- L880,சுரனிமாலா-P702) இந்த தாக்குதலுக்கு வழிநடத்தி சென்றது மட்டுமல்லாது, இந்த தாக்குதலுக்கான கட்டளை அதிகாரியும், D.L.சின்னையா என்ற ஒரு தமிழன்.!

  இந்த இனத்துரோகியால் மூன்று கப்பல்கள் அழிக்க பட்டது. ஒன்று தப்பி சென்றது. மீண்டும் முன்று வாரங்களின் பின் CIA இன் இன்னுமொரு ஒரு வழிகாட்டலில் அந்த கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. அத்தோடு கடல் ஆயுத வளங்கள் “நெட்வொர்க்” முற்று முழுதாக உடைந்து போனது.

  அத்தோடு இறுதி யுத்தத்தின் போது இந்திய அரசு, பல்குழல் எறிகணை செலுத்திக்கான “MBRL இன் செல்கள்” தங்கு தடை இன்றி கிடைப்பதற்கும் ஒழுங்கு செய்து கொடுத்தது. ராடர் தொழில் நுட்பம் உட்பட, நேரடியாகவும் களத்தில் நின்றனர்.

  அத்தோடு தமிழ் நாட்டு மாநில அரசும் தம் பங்கிற்கு Q பிரிவை வைத்து மருந்து, எரிபொருள், அத்தியாவசிய எந்த பொருளும் தமிழீழம் போகாது பாத்துக் கொண்டது.!

  சீனாவும், இந்தியாவுக்கு போட்டியாக, சிறிய ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள், மற்றும் செய்மதி தகவல் உட்பட, விமான எதிர்ப்பு ஆயுதங்களையும் அள்ளி கொடுத்தது.

  நான் ஏன் சும்மா இருப்பான் “எதுக்கும் ஒரு துண்டை போட்டு வைப்போம்” என்று பாக்கிஸ்தானும் தன் பங்கிக்கு அள்ளி மோட்டார் எறிகணைகளை அள்ளிக்கொட்டியது.

  இப்படி 20 நாடுகளின் எதோ ஒவ்வொரு உதவியாகப் பெறப்பட்டு (இது கோத்தபாய தன் வாயால் கூறியது) பெற்ற வெற்றியை தான் எதிரி மார் தட்டுகிறான்.

  என்னை பொறுத்தவரை இவ்வளவு நாடுகளையும் 3வருடம் நாம் தாக்கு பிடித்ததே தமிழனின் வீரம் தான். எதிரிக்கு தெரியும் தான் மட்டும் மோதியிருந்தால் என்னவாகி இருக்கும் என்று.!

  30 வருடம் அந்த பாடம் தானே எம்மிடம் எதிரி தினம் படித்தான். ஒரு நாதியற்ற சிறுபான்மை இனத்தை அழிக்க எத்தனை வல்லரசுகள்.? எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழ தமிழினம்.? ஒன்று மட்டும் உறுதி எமக்கு எம் கையே உதவி.!!!!

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort