அதிக எம்.பி.களை வைத்துக் கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயக்கம் ஏன், மு.க.ஸ்டாலின் கேள்வி,
 • அதிக எம்.பி.களை வைத்துக் கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயக்கம் ஏன், மு.க.ஸ்டாலின் கேள்வி,

  சென்னை: 6 வாரங்களுக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற தகவலை, மத்திய நீர்வளத்துறை செயலர் தெரிவித்த கருத்து குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

  29-ம் தேதி வரை பொறுத்திருப்போம் என துணை முதல்வர் கூறுகிறார். ஆனால் 6 வாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று நீர்வளத்தறை செயலர் யு.பி.சிங் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு அடி பணிந்து தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

  தமிழக அரசு கடந்த சில மாதங்களாகவே நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தனது உரிமை இழந்து வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குறைந்த அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அம்மாநில அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகிறது.

  ஆனால் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள அதிமுக அரசு ஏன் அதுபோன்ற அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்காமல் தயக்கம் காட்டி வருவது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தை முடக்குவதால் எந்த பயனும் இல்லை. ஆகையால் காவிரி மேலாண்மை அமைக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.  

  ஓபிஎஸ் பதில்

  காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.

  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாக உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அப்படி அமைக்காவிட்டால் காவிரி பிரச்சனையில் அனைவரும் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என துணைமுதல்வர் கூறியுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
தையல்
தங்க நகை
ஆன்மிகம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink