பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்,
  • பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்,

    கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா பரோல் கேட்க முடிவு செய்து இருந்தார்.

    இதன்படி, பெங்களூரு சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பரோல் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை துவங்கினர். சசிகலா தரப்பில் 15 நாட்கள் பரோல் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில், பெங்களூரு சிறை  நிர்வாகம், சசிகலாவுக்கு 10 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டு  இருப்பதாக  தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பரோல் கிடைத்ததும், பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் செல்ல இருப்பதாவும் கூறப்படுகிறது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
எம்மவர் நிகழ்வுகள்
அரசியல் கட்டுரைகள்
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink