தினகரன் கட்சிக்கு சிறையில் பெயர் சூட்டிய சசிகலா,
 • தினகரன் கட்சிக்கு சிறையில் பெயர் சூட்டிய சசிகலா,

  நியூமராலஜி' என்ற எண் கணித ஜோதிடப்படி, சசிகலா உருவாக்கிய பெயரை தான், தினகரன், தன் கட்சிக்கு சூட்டியுள்ளார். அதனால் தான், 'எம்.ஜி.ஆர்., திராவிடம்' என்ற சொற்கள் விடுபட்டு உள்ளன.இதற்கிடையில், கட்சி துவக்க விழாவில், 70 சதவீதம், முக்குலத்தோர் சமுதாயத்தினரும், 20 சதவீதம் இதர சமுதாயத்தினரும், 10 சதவீதம் முஸ்லிம்களும் பங்கேற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில், மதுரை, மேலுாரில், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற, புது அமைப்பின் துவக்க விழா நடந்தது.

  நல்ல நேரம்

  அதில், கட்சியின் கொடி மற்றும் பெயரை அறிமுகம் செய்து, தினகரன், 15 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

  அவரது பேச்சுக்கு இடையில், தன் கைக்கடிகாரத்தை, இரண்டு, மூன்று முறை பார்த்து பின், அவர் எதிர்பார்த்த, நல்ல நேரம் நெருங்கியதும், கட்சியின் பெயரை அறிவித்தார்.

  முதலில், 'அனைத்திந்திய அம்மா அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., - எம்.ஜி.ஆர்., அம்மா திராவிடர் கழகம்' என்ற, மூன்று பெயர்களில், ஒன்றை தேர்வு செய்வது குறித்து, தன் ஆதரவாளர்களுடன், தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

  அப்போது, 'அனைத்திந்திய அம்மா அ.தி.மு.க.,' என்ற பெயரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், சசிகலாவை, தினகரன் சந்தித்து பேசியபோது தான், 'அனைத்திந்திய, அண்ணா, திராவிட' ஆகிய, மூன்று பெயர்களை, சசிகலா நீக்கி உள்ளார்.

  கூடுதலாக, 'அம்மா, மக்கள்' என, இரு வார்த்தைகளை சேர்த்து, 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரை சூட்டும்படி கூறியுள்ளார்.சசிகலாவுக்கு ஜோதிடம், நியூமராலஜி மீது அதீத நம்பிக்கை உண்டு. எனவே, அவரே, நியூமராலஜி படி பெயரை தேர்வு செய்துள்ளார்.

  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியில், ஜெயலலிதாவின் உருவ படம் மட்டும் உள்ளது; எம்.ஜி.ஆர்., படம் இல்லை. எம்.ஜி.ஆர்., ரசிகர்களை கவரும் வகையில், நடிகர் ரஜினி, எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசி வருகிறார். ஆனால், தினகரன் துவக்கிய கட்சி பெயரில், எம்.ஜி.ஆர்., பெயர் இல்லை என்ற ஆதங்கம், அவரது ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது.

  அ.ம.மு.க.,வுக்கு, புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துவதற்கு முன்னேற்பாடாக, விண்ணப்ப படிவங்களும், துவக்க விழா மேடைக்கு எடுத்து வரப்பட்டன.

  மாவட்டச் செயலர்கள் சிலர், விண்ணப்ப படிவங்களை, தினகரனிடம் வாங்கிச் சென்றனர்.இரட்டை இலையை மீட்பது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு மற்றும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிந்த பின், அ.ம.மு.க.,வை, தன்னுடைய சொந்த கட்சி யாக நடத்த, தினகரன்

  திட்டமிட்டுள்ளார்.அதுவரை, இதை, அ.தி.மு.க.,வின் போட்டி அமைப்பாக நடத்த விரும்புகிறார்.

  போர்க்குரல்
  தினகரன், புது கட்சி துவக்கக் கூடாது என, முதன் முதலில், புகழேந்தி தான் போர்க்குரல் எழுப்பினார். அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களும், தங்களின் நீதிமன்ற வழக்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், புதிய கட்சி வேண்டாம் என்றனர்.

  இதுபற்றியெல்லாம், சசிகலாவிடம் தினகரன் ஆலோசித்து விட்டு தான், அ.ம.மு.க.,வை துவக்கிஉள்ளார். இதன் துவக்க விழாவிற்கு வந்திருந்த கூட்டத்தில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், 70 சதவீதம் பேர் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  மற்ற சமுதாயத்தினர், 20 சதவீதம் பேரும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், 10 சதவீதம் பேரும் பங்கேற்றுள்ளதாக, முதல்வர் பழனிசாமி தரப்பிற்கு, உளவுத் துறை தகவல்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தொழில்நுட்பம்
ஜோதிடம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink