சர்வதேச உடன்படிக்கைகளின் வகைப்பாடு உருவாகும் நிலைகள்,
 • சர்வதேச உடன்படிக்கைகளின் வகைப்பாடு உருவாகும் நிலைகள்,

  தொகுப்பு..மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE) Zurich-Switzerland,சர்வதேச உடன்படிக்கைகள் (International Treaties)

  நவீன சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களில் முதன்மையான மூலாதாரம் சர்வதேச உடன்படிக்கைகளே ஆகும். உள்நாட்டுச் சட்டத்தை இயற்றும், சட்டமியற்றும் மன்றங்களைப் போன்று சர்வதேச உடன்படிக்கைகள் சர்வதேசச் சட்டத்தை உருவாக்குகின்றன என்றால் மிகையில்லை.

  வரையறையும் பொருள் விளக்கமும்

  சர்வதேச உடன்படிக்கைகள் என்பது, நாடுகளுக்கு இடையே அல்லது நாடுகளின் அங்கங்களுக்கு இடையே சட்ட உரிமைகளையும், கடப்பாடுகளையும் என்று ஒப்பன்ஹீய்ம் வரையறுக்கின்றார். 1969 உடன்படிக்கைச் சட்டம் பற்றிய வியன்னா மாநாடு, ஷரத்து 2-ன்படி சர்வதேசச் சட்டத்தின் கீழ் கவரப்பட்ட, எழுத்து வடிவில் எழுதப்பட்டு, நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் உடன்பாடே சர்வதேச உடன்படிக்கையாகும்.

  ஆனால், ஸ்டார்க் சர்வதேச உடன்படிக்கை எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, நாடுகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் வாய்மொழி உறுதிமொழியும் உடன்படிக்கையே என்கிறார். நாடுகளுக்கு இடையிலான ஒரு உடன்பாடு என்பது உள்நாட்டின் தேசியச் சட்டத்தின் கீழ் கவரப்படாமல், நாடுகளுக்கு இடையிலான சட்ட உறவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், அதன் வடிவம் அல்லது பெயர் அல்லது அது இறுதி செய்யப்பட்ட சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அது சர்வதேச உடன்படிக்கை தான் என்கிறார் ஸ்டார்க். Eastern Green land Case - வழக்கில் சர்வதேச  நிரந்தர நீதிமன்றமும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றொரு நாட்டின் வெளியுற அமைச்சருக்கு அளிக்கும் வாய்மொழியான வாக்குறுதியும் சர்வதேச உடன்படிக்கையே என்று கூறியுள்ளது.


      எனவே, நாடுகளுக்கு இடையே அல்லது நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் இடையே சட்ட உரிமைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குகின்ற ஒப்பந்தத் தன்மை வாய்ந்த உடன்பாடே சர்வதேச உடன்படிக்கை எனலாம்.

  சர்வதேச உடன்படிக்கையும் ஒப்பந்தமும் (International Traeties and Contracts)

  சர்வதேச உடன்படிக்கை அதன் தரப்பினர்களுக்கிடையே ஒப்பந்தக் கடப்பாடுகளை உருவாக்குவதாக இருந்தாலும் அது ஒப்பந்தத்தில் இருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் சர்வதேச உடன்படிக்கை என்பது நாடுகளுக்கு இடையில் அல்லது நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் ஏற்படுவதாகும்.

  மாறாக ஒப்பந்தம் என்பது தனிநபர்களுக்கு இடையில் ஏற்படுவதாகும். ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் ஏதேனுமொரு தரப்பாவது சர்வதேச நபராக இல்லாமல் தனிநபராகவோ நிறுவனமாகவோ இருக்கும். மேலும், சர்வதேச உடன்படிக்கை சர்வதேசச் சட்டத்தின் கீழ் கவரப்பட்டிருக்கும் உடன்பாடாகும். ஆனால் ஒப்பந்தமோ உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் கவரப்பட்டிருக்கும் உடன்பாடாகும்.

  உடன்படிக்கைகள் சட்டம் பற்றிய வியன்னா மாநாடு, 1969 (Vienna Convention on the law of Treaties,1969)

  1969ஆம் ஆண்டு முன்புவரை சர்வதேச உடன்படிக்கைகள் பற்றிய சட்டவிதிகள் பெரும்பாலும் சர்வதேச வழக்காறுகளாகவே நடைமுறையில் இருந்து வந்தன. இந்த விதிமுறைகள் 1969 ஆம் ஆண்டு மே 23 அன்று ஏற்கப்பட்ட உடன்படிக்கை சட்டம் பற்றிய வியன்னா மாநாட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டன. இம்மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகள் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 27 முதல் செயலுக்கு வந்தன. 2009 ஆம் ஆண்டு வரை 110 நாடுகள் இம்மாநாட்டு விதிகளை ஏற்புறுதி செய்திருந்தன. அமெரிக்கா உள்ளிட்ட இதுவரை ஏற்புறுதி செய்யாத நாடுகளும் கூட, இம்மாநாட்டு விதிகள் ஏற்கனவே செயலில் இருந்த வழக்காற்றினை பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  உடன்படிக்கைகளின் வகைப்பாடு

   பல்வேறு சட்ட அறிஞர்கள் வெவ்வேறு அடிப்படைகளில் உடன்படிக்கைகளை வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர். ஒப்பன்ஹீய்ம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாகும் தன்மையின் அடிப்படையில் உடன்படிக்கைகளை சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள் என்றும் பிற நோக்கங்களுக்கான ஒப்பந்த உடன்படிக்கைகள் என்றும் வகைப்படுத்துகிறார்.

  (i)    சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள் (Law making Treaties)

  (ii)    ஒப்பந்த உடன்படிக்கைகள் (Treaty Contract)

  இருதரப்பு உடன்படிக்கைகளும் பலதரப்பு உடன்படிக்கைகளும் (Bileteral and Multi-Lateral Treaties)
                                    
  இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் சர்வதேச உடன்படிக்கை இருதரப்பு உடன்படிக்கை எனப்படும். இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையில் ஏற்படும் சர்வதேச உடன்படிக்கை பலதரப்பு உடன்படிக்கை எனப்படும். சில நேரங்களில் எண்ணற்ற நாடுகள் பங்கெடுக்காமல் வெகு சில நாடுகள் மட்டும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டால் அத்தகைய உடன்படிக்கைகள் பன்மைத்துவ உடன்படிக்கைள் (Plurilateral Treaties) எனப்படும். பன்மைத்துவ உடன்படிக்கைகள், பலதரப்பு உடன்படிக்கைகளின் சிறப்பு உட்பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது.

  உடன்படிக்கையின் பல்வேறு பெயர்கள் (Various Nomenclatures of treaties)

  சர்வதேச உடன்படிக்கை, அவை இறுதி செய்யப்படும் சூழ்நிலை, வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவை:
      
  (i) மாநாடு (Convention):  பல நாடுகள் கூடித் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்பாடு, மாநாடு எனவும் அதன் ஷரத்துக்கள் ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் போதும் அது மாநாடு என்றே அழைக்கப்படும். ஏனெனில் அதுவும் பல நாடுகள் கூடி ஏற்படுத்திக் கொள்ளும் உடன்பாடே ஆகும்.
      
  (ii) துணைக் குறிப்பு (Protocol): ஒரு முழு வடிவமான உடன்படிக்கை அல்லது மாநாட்டு விதியாக இல்லாமல் முறை சாராத வடிவத்தில் ஏற்கப்பட்டிருக்கும் விதிகளே துணைக்குறிப்பு எனப்படும். துணைக்குறிப்பு என்பது பல வகைப்படும். இது ஒரு மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகளுக்கான விளக்கம், துணை விதிகளைக் கொண்ட துணை ஆவணமாக இருக்கலாம். அல்லது ஒரு மாநாட்டில் விடுபட்டுப் போனவற்றைக் கூறும் துணை மாநாட்டுக் குறிப்பாக இருக்கலாம் அல்லது நாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தையின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குறிப்பாக இருக்கலாம். சர்வதேசச் சட்டத்தில் துணைக் குறிப்புகளும் மாநாட்டு விதிகளைப் போலவே கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.
      
  (iii) உடன்பாடு (Agreement): மாநாட்டின் வடிவில் இல்லாமல் நாடுகளின் தலைமைகளுக்கு இடையில் கையெழுத்திடப்படும் ஆவணமே உடன்பாடு எனப்படும். பொதுவாக மாநாட்டைப் போல் உடன்பாட்டிற்கு நாடுகளின் ஏற்புறுதி தனியே தேவையில்லை.
   
  (iv) வாய்மொழிக் குறிப்பு (Process-Verbal): நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் போது வாய்மொழியாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை எழுத்து மூலமாக பதிவு செய்திருக்கும் ஆவணமே வாய்மொழிக் குறிப்பு எனப்படும். நாடுகளின் தூதரங்களுக்கு இடையில் நடைமுறை சார்ந்த விஷயங்கள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிர்வாக உடன்படிக்கையும் வாய்மொழிக் குறிப்பு என்றே அழைக்கப்படும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
இலங்கை சட்டம்
இலங்கை செய்தி
சரித்திரம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort