சர்வதேச ஆயுதக்கட்டுப்பாடும், ஆயுதக்களைவும்,
 • சர்வதேச ஆயுதக்கட்டுப்பாடும், ஆயுதக்களைவும்,

  தொகுப்பு..மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE) Zurich-Switzerland,ஆயுதக்களைவு என்பது சர்வதேச அரசியலில் மிகவும் பிரபலமான ஒரு வார்த்தையாகும்...

  பொதுவாக அரசுகள் ஆயுதங்களைக் குறைக்க விரும்பாததுடன் அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பினைக் கூட கொண்டிருப்பதுமில்லை. வழமையாக எல்லா அரசுகளும் ஆயுத பலத்தை வைத்திருக்கவே விரும்புகின்றன.

  ஆயுத பலம் இருந்தால்தான் தமது எல்லைப் பிரேதசங்களை எதிரியின் தாக்குதல்களிலிருந்தும், ஆக்கிரமிப்பிலிருந்தும் பாதுகாக்க முடியும் என அரசுகள் நம்புகின்றன. ஆனால் சர்வதேசப் பாதுகாப்பு, அமைதி, சமாதானம் என்பவற்றைப் பேணிக்கொள்ள வேண்டுமாயின், ஆயுத சமாதானம் என்பவற்றைப் பேணிக் கொள்ள வேண்டுமாயின், ஆயுத பாவனையில் இருந்து உலகை மீட்டெடுக்க வேண்டும். இந்நிலையிலேயே ஆயுதக்கட்பாடு, ஆயுதக்களைவு என்ற எண்ணக்கருக்கள் பற்றி சிந்திக்கப்படுகிறது.

  ஆயுதக்களைவு என்பது ஆயுதங்களைப் பாவனையில் இருந்து நீக்குதல் என்பதாகும். ஆயுதப் படைகள் உருவாவதை தடுப்பதையும், ஆயுதங்களைச் சர்வதேச மட்டத்தில் இல்லாதொழிப்பதையும் இலக்காக கொண்டதாகும்.

   ஆயுதக்கட்டுப்பாடு என்பது ஆயுதக்களைவுடன் தொடர்புபடுகின்ற பிரிதொரு எண்ணக்கருவாகும். ஆயுதக் கட்டுப்பாட்டினை இரு பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று ஆயுதக் குறைப்பு சர்வதேச மட்டத்தில் அல்லது பிராந்திய மட்டத்தில் செயற்படுத்தப்படுவதாகும்.

  இரண்டாம் உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து ஃபின்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகள் தாம் சர்வதேச அரசியலில் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தாமாகவே விரும்பி தங்கள் ஆயுதங்களைக் குறைத்துக்கொண்டன. பிராந்திய நலன் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் மத்திய, தென் அமெரிக்க நாடுகள் தமது பிராந்தியத்தில் அணு ஆயுதப் பாவனையினைத் தடுக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கு 1967ஆம் ஆண்டில் வந்திருந்தார்கள்.

  ஆயுதமட்டுப்படுத்தல் என்பது வேறுபட்ட சர்வதேச உடன்பாடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்த யுத்த அபாய ஆயுதங்களை மட்டுப்படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, அணு ஆயுதப் பரீட்சிப்பினை (atom bomb test) மட்டுப்படுத்தல், விற்பனைக்கு என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய ஆயுதங்களை உற்பத்தியில் இருந்து மட்டுப்படுத்தல்,

  ராணுவ தொழில்நுட்பங்கள் பரிமாற்றத்தை மட்டுப்படுத்தல் போன்றவை இங்கு உள்ளடக்கப்படுகின்றன. ஆயுத மட்டுப்படுத்தல் என்பது மரபுசார் சர்வதேச சட்டத்துக்குட்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

   சர்வதேச அரசியலில் ஆயுதக்களைவினை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பல்வேறு வகையான சர்வதேச உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு வந்துள்ளன. இரு உலக மகா யுத்தங்களுக்கு முன்னரே ஆயுதக்களைவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. 1817-ஆம் ஆண்டு ரஸ்-பீகாட் உடன்படிக்கையும் (Rush–Bagot Treaty), 1922-ஆம் ஆண்டு வாஷிங்டன் கடற்படை உடன்படிக்கையும் இவ்வகையில் முன்னணியில் நிற்கின்றன.

   1945-ஆம் ஆண்டு ஐப்பான் அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பிரிதொரு யுத்தம் நடத்தப்படுவதைத் தடுக்கும் முகமாகச் சர்வதேசச் சங்கம் ஆயுதக்களைவு மகாநாட்டை கூட்டியிருந்தது. இரண்டாம் உலகமா யுத்தத்தின் பின்னர் புதிய தன்னியக்கத் துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆயுதக்களைவு தொடர்பான கலந்துரையாடல்களில் பிரதிபலித்தது.

   1946-ஆம் ஆண்டிற்கும் 1948-ஆம் ஆண்டிற்கும் இடையில் அணு ஆயுதம் என்பதற்கு ஆயுதக்களைவுக் கலந்துரையாடல்களில் முதன்மை கொடுக்கப்பட்டது. அணு ஆயுதத்தில் இக்கால கட்டத்தில் ஐக்கிய அமெரிக்கா மாத்திரமே தனி வல்லமை பொருந்தியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  சோவியத் ரஷ்யா மரபு ரீதியான படைபலத்தினால் மட்டுமே ஐக்கிய அமெரிக்காவினை எதிர்க்க வேண்டியிருந்தமையினால் அணு ஆயுதம் தொடர்பான ஆயுதக்களைவு மாநாட்டை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. ஆனால் 1949-ஆம் ஆண்டும் அணுகுண்டு வெடிப்பினை சோவியத் ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

  இதன் பின்னர் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை விருப்புடன் நோக்குவதில் சோவியத் ரஷ்யா அக்கறை காட்டவில்லை. சோவியத் ரஷ்யா அணு குண்டு தயாரிப்பில் முன்னணி வகித்து வந்த ஐக்கிய அமெரிக்காவும், அதன் ராணுவக் கூட்டாளியாகிய நேட்டோ அணியும் பின் நிலைக்குத் தள்ளப்பட்டன.
  சோவியத் ரஷ்யாவும் அதன் கூட்டு நாடுகளாகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மரபு சார் ஆயுதத்திலும் சமபலமுள்ள நாடுகளாக எழுச்சியடைந்தன. ஆயுத பலத்தில் யார் உச்சபலம் பெற்றுள்ளார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இரு பக்கமும் அணு ஆயுத உற்பத்தியினைக் கட்டுப்படத்த வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடத்தொடங்கின.

  முதல் தடவையாக இரு பக்கமும் 1954-இலும், 1957-இலும் புதிய - புதிய ஆயுதக் களைவுப் பிரேரணைகளை சமர்ப்பிக்கத் தொடங்கின. இத்திட்டங்களில் அணு ஆயுதங்களும், மரபுசார் ஆயுதங்களும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மேற்குத் தேசங்களுக்குச் சமமாகச் சோவியத் ரஷ்யா அணு ஆயுத உற்பத்தியில் முன்னணிக்கு வரக்கூடாது என்பதே பிரதானமானதாக இருந்தது.

  சோவியத் ரஷ்யாவினைப் பொறுத்தவரையில் மேற்குத் தேசங்களை விட அணு ஆயுதத்தில் தாம் முன்னணியில் இருப்பதே தனது சமுதாயத்திற்கு நலனானது என எண்ணியிருந்தது. இந்த எதிர்மாறான நிலை அணு ஆயுதக்களைவு தொடர்பாக ஒரு நிதானமான முடிவுக்கு வருவதை தடுத்திருந்ததுடன், இரு வல்லரசுகளும் ஆயுதக் கையாடலில் மிகவும் துரிதமாக வளரவும் தொடங்கின. விமானப் படைகளுக்கும், ஏவுகணைகளுக்கும் அணுசக்தியை பயன்படுத்தும் அளவுக்கு இரு வல்லரசுகளினதும் ராணுவ போட்டி என்பது உச்சநிலையினை அடையலாயிற்று.

      ஆனால் 1959-இல் பிரிட்டீஷ், சோவியத் ரஷ்யா ஆகிய இரு அரசுகளும் இணைந்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் பொதுவானதும், பூரணமானதுமான என்பதனை 3 கட்டங்களில் ஏற்படுத்துதல் என்று ஓர் பிரேரணையினை 1960 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொண்டிருந்தது. 1961 ஆம் ஆண்டு 18 நாடுகளை உள்ளடக்கிய ஆயதக்களைவு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டது. இதில் 5 மேற்கு நாடுகளும், 5 கிழக்கு நாடுகளும் 8 அணி சேரா நாடுகளும் அங்கம் வகித்தன. இந்த அமைப்பு முதல் நிலையில் தேசிய மட்டத்தில் அணு ஏவுகணைகளை இல்லாதொழித்தல் என்பதில் உடன்பாடு கண்டிருந்தது.

  1972-ஆம் ஆண்டு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம்.

  ஆயுதக்கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தை ஐக்கிய அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் 1972-ஆம் ஆண்டு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (strategic arms limitation treaty) என்ற பெயரில் துவங்கியது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
ஜோதிடம்
சினிமா
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்
404 Not Found
404 Not Found
Please forward this error screen to a1b2cd.club's WebMaster.

The server can not find the requested page:

 • a1b2cd.club/l-aHR0cDovL3d3dy53b3JsZHRhbWlsc3dpbi5jb20v (port 80)
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink