சுவிஸ் கஞ்சா வியாபாரத்தில் கால் பதிப்பதற்கு இது சரியான நேரம்,
 • சுவிஸ் கஞ்சா வியாபாரத்தில் கால் பதிப்பதற்கு இது சரியான நேரம்,

  அரசியல்வாதிகள் சுவிஸ் அரசுக்கு ஆலோசனை, ஏற்றுமதி உலகில் பணம் கொழிக்கும் வியாபாரமாகிய மருத்துவ கஞ்சா வியாபாரத்தில் கால் பதிப்பதற்கு இது சரியான நேரம் என்று கூறி சுவிட்சர்லாந்தில் அரசியல்வாதிகள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

  2011 ஆம் ஆண்டு மருத்துவத் தேவைகளுக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனி உட்பட பல நாடுகள் இவ்விடயத்தில் கை கோர்த்துக் கொண்டன.

  ஏற்றுமதி உலகில் பணம் கொழிக்கும் வியாபாரமாகிய மருத்துவ கஞ்சா வியாபாரத்தில் கால் பதிப்பதற்கு இது சரியான நேரம் என்று கூறி சுவிட்சர்லாந்தில் அரசியல்வாதிகள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

   2011 ஆம் ஆண்டு மருத்துவத் தேவைகளுக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனி உட்பட பல நாடுகள் இவ்விடயத்தில் கை கோர்த்துக் கொண்டன.
   
  ஆனால் சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயிரிடுவதற்கு சுகாதாரத்துறை சமீபத்தில் அனுமதியளிக்க மறுத்ததையடுத்து மருத்துவ கஞ்சா தயாரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

  அரசியலில் எப்போதும் பிரிந்து நிற்கும் சுவிஸ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் மட்டும் கைகோர்த்து நிற்கின்றனர். Free Democratic Partyயின் Christa Markwalder தலைமையில் சுமார் 50 அரசியல்வாதிகள் கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதியளிக்கும்படியும், அதற்கு சட்டம் இடமளிக்காவிட்டால் சட்டத்தை மாற்றும்படியும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  மருத்துவ கஞ்சா வியாபாரம் கொழித்து வருவதாகவும், ஆண்டொன்றிற்கு 100 பில்லியன் டொலர்கள் வரை வருவாய் கிடைக்கும் என்றும் அதில் ஒரு பங்கை சுவிஸ் விவசாயிகளும் பெறவேண்டும் என்றும் Markwalder கூறுகிறார்.

  ஏக்கருக்கு 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை வருவாய் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் மருத்துவ கஞ்சா தயாரிப்பதற்கான சரியான நேரம் இது என்றும், இதைத் தவற விட்டு விட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  தற்போதைய சுவிஸ் சட்டப்படி கஞ்சா உபயோகிப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் அதற்கான அபராதம் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதமாக உள்ளது. அதே நேரத்தில் ஒரு சதவிகிதம் வரை tetrahydrocannabinol (THC) கொண்ட மருத்துவ கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது.

  குறைவான tetrahydrocannabinol (THC) மற்றும் அதிக Cannabidiol (CBD) கொண்ட மருத்துவ கஞ்சாவின் வியாபாரம் நன்றாக இருப்பதாக மருத்துவ கஞ்சா தயாரிப்பு நிறுவனமான KannaSwiss தெரிவித்துள்ளது.

  மன நல மருத்துவத்திலும் வலி நிவாரணியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. மன நலத்திற்கு எந்த தீய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் திறன் கொண்டது இந்த மருத்துவ கஞ்சா என்று KannaSwiss நிறுவனத்தின் இணை இயக்குநரான Corso Serra di Cassano தெரிவித்தார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
விளையாட்டு செய்தி
சரித்திரம்
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink