மன அழுத்தத்தால் நான்கில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தகவல்,
 • மன அழுத்தத்தால் நான்கில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தகவல்,

  சுவிட்சர்லாந்தில் மன அழுத்தம் காரணமாக நான்கில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

  இதனால் கடுமையான ஆரோக்கிய பிரச்னைகளும் போதிய செயல்திறனை வெளிப்படுதாமையும் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

  சுவிட்சர்லாந்தின் பெர்ன் மற்றும் சூரிச் பலகலைக்கழகங்கள் ஒன்றிணைந்து தனியார் நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

  இதில் வேலை நேரத்தில் சுவிஸ் ஊழியர்களின் மன அழுத்தமானது 25.4 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

  இது கடந்த 2014 ஆம் ஆண்டு சுமார் 24.8 விழுக்காடு என இருந்துள்ளது. உறுதியற்ற வேலை, நிர்வாக குளறுபடிகள், தலைமை நிர்வாகியிடம் இருந்து ஒத்துழைப்பு இன்மை, நெகிழ்வுத்தன்மை இல்லாமை என பால காரணிகளை ஊழியர்களின் மன அழுத்தத்திற்கு காரணமாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது..

  ஆனால் மூன்றில் ஒருபகுதி ஊழியர்கள், தங்களுக்கு அலுவலகங்களில் எவ்வித பிர்சனையும் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

  மேலும் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பொதுவாக மனநிறைவு இன்றி இருப்பதாகவும், வேலை நேரத்தில் கடுமையாக கோபப்படுபவராகவும், வேலையை உதறும் வகையில் நடந்துகொள்பவராகவும் இருப்பதாக குறித்த ஆய்வானது சுட்டிக்காட்டியுள்ளது.

  இவ்வாறான ஊழியர்கள் தூக்கமின்றி அவதிக்கு உள்ளாவதாகவும், உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

  ஊழியர்களின் இந்த மன அழுத்தப் பிரச்னைகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5.8 பில்லியன் பிராங்க் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
இலங்கை செய்தி
ஜோதிடம்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்