வடக்கு சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 3.1 ஆக பதிவு,
 • வடக்கு சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 3.1 ஆக பதிவு,

  திங்கட்கிழமை அதிகாலை வடக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

  தெற்கு ஜெர்மானிய நகரமான ஹெர்ரிஷ்ரிய்ட் அருகே அதிகாலை 12.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என சுவிஸ் நிலஅதிர்வு சேவை (SED) தெரிவித்துள்ளது. இந்த இடம் ஆர்காவ் மண்டலத்தின் லாஃபென்பர்க்கில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

  இந்த நிலநடுக்கத்தின் அளவினால் எந்தவிதமான சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று SED தெரிவித்துள்ளது.

  சுவிஸ்-ஜேர்மன் எல்லையில் கடந்த ஆண்டு 1,230 நிலஅதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  கடந்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக இருந்தது. கடந்த 2017 மார்ச் 7 ம் தேதி கிளாருஸ் மண்டலத்தின் ஒர்ஸ்ட்டாக் மலைப்பகுதியில் லிந்தால் நகரத்திலிருந்து 6 கிமீ மேற்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

  ஒவ்வொரு ஆண்டும் 3 மற்றும் 4 எனும் ரிக்டர் அளவிற்கு இடையில் பத்து நிலநடுக்கங்கள் நம் நாட்டில் ஏற்படுகிறது, 4+ ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒவ்வொரு 1-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் நாட்டில் ஏற்படுகிறது.

  6 அல்லது அதற்கு மேல் ரிக்டர் அளவிலான கடுமையான பூகம்பங்கள், ஒவ்வொரு 50-150 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும்.

  கடைசியாக, 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம், 1946 ல் சியர்ரேவைத் தாக்கியது. அப்படியெனில் சுவிட்சர்லாந்து 2040 ஆம் ஆண்டுவாக்கில் மற்றொரு பெரிய பூகம்பத்தை சந்திக்க இருப்பதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
இந்திய சட்டம்
 மரண அறித்தல்