ஜெனீவாவை சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடியுரிமைக்கான காலக்கெடு,
 • ஜெனீவாவை சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடியுரிமைக்கான காலக்கெடு,

  ஜெனீவாவை சேர்ந்த வெளிநாட்டவர்கள் சுவிஸ் பாஸ்போர்ட் காலக்கெடுவை சந்திக்க விரைகின்றனர்..

  ஜெனீவாவில் வாழும் சுமார் 5,800 வெளிநாட்டவர்களுக்கு 2017 ல் சுவிஸ் குடியுரிமை வழங்கப்பட்டது. கடுமையான விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில் வருட இறுதி காலக்கெடுவை சந்திக்க விண்ணப்பதாரர்கள் விரைந்ததால் இந்த எண்ணிக்கை 2016 ல் இருந்ததை விட மிக அதிகளவில் இருந்தது. தேசிய அளவில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுவிஸ் பாஸ்போர்ட்களுக்கான தேவை 25% உயர்ந்துள்ளது.

  2016 ல் 3,906 ஆக இருந்த சுவிஸ் குடியுரிமை பெற்று ஜெனீவாவில் குடியேறிய புதிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, 2017 ல் 5,789 ஆக உயர்ந்துள்ளது என கடந்த திங்களன்று ஜெனீவா மக்கள்தொகை சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2018 அன்று நடைமுறைக்கு வந்த கடுமையான சுவிஸ் குடியுரிமை சட்டம் காரணமாக இந்த உயர்வு நிகழ்ந்துள்ளதை இது விவரிக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1,700 விண்ணப்பங்கள் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டன.

  டிசம்பர் 2017 இறுதியில், ஜெனீவா காண்டன் 498,221 பதிவுசெய்யப்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது. 500,000 குடியிருப்பாளர்கள் எனும் மைல்கல்லை ஜூன் மாதத்தில் எட்டிவிடும். வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் இந்த மக்கள் தொகையில் 40% இருக்கின்றனர், இது முந்தைய ஆண்டுகளில் இருந்து சற்று குறைந்த அளவே ஆகும், அதில் 65% ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள்.

  ஜெனீவா மற்றும் கிரேட்டர் ஜெனீவா அல்லது ஃபிராங்கோ-வால்டோ-ஜெனீவாஸ் பகுதி என்று அழைக்கப்படும் ஜெனீவாவின் விரிவாக்கப்பட்ட பகுதி, காண்டன் வாடிற்கு இடையே, மற்றும் பிரான்ஸ் மற்றும் ஜெனீவாவின் பெல்லெகார்டே-சுர்-வால்சரைன், அன்மாஸ்ஸே, மேய்ரின், போனேய்வில், தொனன்-லெஸ் பைன்ஸ் ஆகிய பகுதிகளில் ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2030 வாக்கில், இப்பகுதியின் மக்கள்தொகை குறைந்தபட்சம் 200,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
தமிழகச் செய்திகள்
விளையாட்டு செய்தி
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்