சுவிட்சர்லாந்தின் 142 வயதான சீஸ் கட்டிகள்,
 • சுவிட்சர்லாந்தின் 142 வயதான சீஸ் கட்டிகள்,

  லீ மேட்டின்-இன் கருத்துப்படி, வலாய்ஸ் பகுதியில் உள்ள சுவிஸ் ஆல்பைன் நகரமான க்ரிமெண்ட்ஸ்-இல் உள்ள ஒரு சீஸ் கட்டிகள் சேகரிப்பு மையம் உலகிலேயே பழமையான இரண்டு சீஸ் கட்டிகளை கொண்டுள்ளது, இவை மிகப்  பழமையானதாகும்.

  சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் 72 சீஸ் கட்டிகளில் இந்த இரண்டு சீஸ் கட்டிகள் 1875 ஆம் ஆண்டு, அதாவது 142 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டதாகும். இந்த சீஸ் கட்டிகள் தயாரிக்கப்பட பயன்படுத்தப்பட்ட பாலைக் கொடுத்த பசுமாடுகள் மேய்ந்த பசும்புல்வெளி, தற்போது 1958இல்  கட்டி முடிக்கப்பட்ட அணையினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மொய்ரி ஏரியினால் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.

  இந்தச் சீஸ் கட்டிகள் உலகப் போர்களையும், பஞ்சங்களையும் தாங்கியுள்ளது.

  தனது தாயார், சகோதரர் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து இந்தப் பழமைவாய்ந்த சீஸ் கட்டிகளை பாதுகாத்துவரும் ஜீன்-ஜாக்கஸ் ஜுஃபெரி, இந்தச் சீஸ் கட்டிகள் தனது பாட்டியின் மாமாவிடம் இருந்து தனது பாட்டிக்கு ஒரு பரிசுப் பொருளாகக் கிடைத்ததாகத் தெரிவித்தார். அவை ஏன் சாப்பிடப்படவில்லை என்ற காரணம் பதிவு செய்யப்படவே இல்லை. "ஒருவேளை அவர்கள் அதை வெறுமனே மறந்துவிட்டார்கள் போல" என  ஜுஃபெரி குறிப்பிடுகிறார்.

  "அவை ராக்லெட் சீஸ்கள்" எனக் கூறுகிறார். ராக்லெட் சீஸை தயாரிக்க அதிக வெப்பம் தேவை, அதனால் சீஸ் கட்டிகளின் வாழ்நாள் விளக்கத்தை இது விவரிக்கலாம். இவை சாப்பிடத் தகுதியானவை என்பதில் ஜுஃபெரிக்கு எந்த சந்தேகமும் இல்லை, இருப்பினும் யாரும் இவற்றை சுவைக்கவில்லை. இவற்றை பாதுகாக்க முயற்சித்த போதும் எலிகள் சிறுசிறு துண்டுகள் எடுத்துக் கொண்டதை தடுக்க முடியவில்லை.

  இந்த சீஸ் கட்டிகள், ஒரு வகையில், கைகளால் தொடும்போது சற்றே பிசுபிசுப்பானதாக இருக்கும் பழைய மரத்தின் அடிப்பகுதி துண்டுகள் போல் இருக்கிறது. இந்த சீஸ் கட்டிகள் பழைய பார்மேசன் போல இருப்பதாக ஜுஃபெரி நினைக்கிறார். லீ மேட்டின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு வீடியோவில் (Video Link) இந்த சீஸ் கட்டிகளின் படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

  இருப்பினும் இந்த சீஸ் கட்டிகள் சாப்பிடுவதற்கு இல்லை. "செல்வந்தர்கள் சிலர் இவற்றிற்கு எவ்வளவு விலை கொடுக்க வந்தாலும், இவற்றை நாங்கள் விற்கப்போவதில்லை" என்கிறார் ஜுஃபெரி. இந்த சீஸ் கட்டிகளுக்கு விலைமதிப்பில்லாத ஒரு கலாச்சார மதிப்பு இருக்கிறது

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
தொழில்நுட்பம்
இலங்கை சட்டம்
ஜோதிடம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink