நச்சு தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா: பிரித்தானிய பிரதமர் காட்டம்,
 • நச்சு தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா: பிரித்தானிய பிரதமர் காட்டம்,

  பிரித்தானியாவில் வசித்து வரும் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நச்சு தாக்குதலில் ஈடுபட்டது ரஷ்யா என பிரதமர் தெரேசா மே குற்றஞ்சாட்டியுள்ளார்.

  பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் கடந்த 4 ஆம் திகதி வணிக வளாகம் ஒன்றின் வெளியே முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal மற்றும் அவரது மகள் மீது நச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

  தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

  Skripal மற்றும் அவரது மகள் மீது நச்சு அமிலம் தாக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக நேரடியாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மே,

  இந்த விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க ரஷ்யாவுக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கியுள்ளார்.

  இதனிடையே ரஷ்யாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

  ரஷ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் Sergei Skripal(66). இவர் சில ரஷ்ய உளவாளிகளை பிரித்தானிய உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

  13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரித்தானியா அங்கிருந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
இந்திய சட்டம்
இலக்கியம்
 மரண அறித்தல்