தமிழிசையை உறுப்பினராக இணைத்தது குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம்,
 • தமிழிசையை உறுப்பினராக இணைத்தது குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம்,

  தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு அழைப்பு வந்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்து உள்ளது.

  திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. மாற்றத்தைகொடுப்பதற்கு பா.ஜனதாவால் மட்டுமே முடியும். சிறையில் இருப்பவரின் படத்தை போட்டு, டி.டி.வி.தினகரன் தமிழகத்தை தலை நிமிரச்செய்ய கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார். திரைப்படத்துறை முடங்கிக்கிடக்கிறது. திரைப்படத்துறையில் சம்பாதித்த நடிகர்கள் அந்த துறையை விட்டு விட்டு அரசியலை காப்பாற்ற வருவோம் என்று வருகிறார்கள் என்றார்.

  மேலும் பேசுகையில், கமல்ஹாசன் அவருடைய கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார். என்னுடைய இ-மெயில் முகவரிக்கு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ஒரு மெயில் வந்துள்ளது. அதில் நீங்களும், நானும் நாம் ஆவோம். இன்றிலிருந்து எனது கட்சியில் நீங்கள் உறுப்பினரானீர்கள். உங்கள் உறுப்பினர் எண் என்று குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. பா.ஜனதா மாநில தலைவரான என்னை கமல்ஹாசன் கட்சியில் சேர்த்து இ-மெயில் அனுப்பி உள்ளனர். இவர்கள் உறுப்பினர் சேர்க்கையை எப்படி நம்ப முடியும். கமல்ஹாசன், ரஜினிகாந்தை பார்த்து தினமும் கருத்து சொல்லவில்லை என்கிறார். அன்றாட பிரச்சினைகளை பற்றி வாய்மூடி இருக்கிறார் என்கிறார்.

   கொஞ்சநாளில் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் இப்போது கேட்கிறார். இதுநாள் வரை அவர் என்ன செய்து கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்துக்குள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தமிழகத்தில் பலமாக காலூன்றி வருகிறது என்றார்.

  தமிழிசையை உறுப்பினராக இணைத்தது குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்து உள்ளது. தமிழிசை செளந்தரராஜன் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்ததால் தான், அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

  உறுப்பினர் பதிவு தொடர்பான விமர்சனம் எழுந்த நிலையில், தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு அழைப்பு வந்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்து உள்ளது.

   நீங்கள் காட்டியதுபோல் நாங்களும் படம் காட்ட விரும்பவில்லை என அக்கட்சியின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே... நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை... பதிவு செய்தமைக்கு நன்றி  என மக்கள் நீதி மய்யம் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
இலக்கியம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink