கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர் 114 கன அடியாக ஆனது,
 • கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர் 114 கன அடியாக ஆனது,

  பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி கண்டேலறு அணையில் இருந்து நீர் இருப்பு குறைந்த நிலையில், தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு 114 கன அடியாக குறைந்தது  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னனை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கடந்த டிசம்பர் 27ம் தேதி தண்ணீர்  திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஜீரோ பாயின்டிற்கு கடந்த ஜனவரி 1ம் தேதி வந்தடைந்தது. ஆனால், கண்டலேறு அணையில்  2,500 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும் ஆந்திரா கிருஷ்ணா கால்வாயோர பகுதிகளில் தண்ணீர் திருடப்படுவதால் 400 கன  அடி நீர் கூட கிடைக்கவில்லை.

  இதனால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளை நேரில் சந்தித்து தண்ணீர் திருட்டை தடுக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால், ஆந்திர எல்லையோர பகுதிகளில் விதிகளை மீறி கிருஷ்ணா நீர் திருடப்படுவதை தடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக-ஆந்திர எல்லையோர கால்வாய்பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய  53 மோட்டார்  பம்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக தமிழக எல்லைக்கு 500 கன அடிக்கு மேல் வரை நீர் வந்து சேர்ந்தது. இதனால்,  பூண்டியின் ஏரியின் நீர் மட்டம்  2 டிஎம்சியாக உயர்ந்தது.

  இந்த நிலையில், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 7 டிஎம்சி நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், கண்டலேறு அணையில்  இருந்து திறந்து விடும் தண்ணீர் அளவு 615 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 114 கனஅடியாக தமிழக  எல்லைக்கு வருகிறது.

  தற்போது வரை தமிழக எல்லைக்கு 2.17 டிஎம்சி நீர் வந்து சேர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் நிறுத்தப்படும் என்று  கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு 3 டிஎம்சி வரை தண்ணீர் தரப்படும் என்று ஆந்திரா அரசு உறுதியளித்திருந்தது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு  குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு 3 டிஎம்சி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
சிறுவர் உலகம்
மங்கையர் பகுதி
ஜோதிடம்
 மரண அறித்தல்