வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு,
 • வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு,

  வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு,
  செய்யப்பட்டுள்ளது  என வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

  வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  வவுனியாவில் வீடமைப்புக்காக 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இதனூடாக 50 மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

  இதேவேளை, 40 மாதிரிக்கிராமங்களே அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தாலும் வவுனியாவிற்கு வருகை தந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவருடன் மக்கள் பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மேலும் 10 மாதிரிக்கிராமங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  எனவே பிரதேச செயலாளர் காணியை ஒதுக்கீடு செய்து அதற்கான பத்திரங்களுடன் பயனாளிகள் இருப்பார்களேயானால் அவர்களுக்கான திட்டத்தினை செயற்படுத்த முடியும் என தெரிவித்தார்.

  இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பயனாளிகளை அடையாளங்கண்டு காணிகளை வழங்குவதற்கு எமக்கான சுற்றுநிருபம் தடையாவுள்ளதால் எம்மால் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு காணியை விடுவிப்பு செய்துகொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
உலக சட்டம்
சிறுவர் உலகம்
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்