சுவிட்சர்லாந்தில் டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்பு? வெளியான தகவல்,
 • சுவிட்சர்லாந்தில் டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்பு? வெளியான தகவல்,

  வடகொரிய ஜனாதிபதியுடன் சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக் கொண்டதை அடுத்து, அந்த சந்திப்பு எங்கே நடைபெறும் என ஊகங்கள் பல வெளியாகியுள்ளன.

  வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் டொனால்டு டிரம்ப் இணைந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஆனால் இரு நாடுகளும் இது தொடர்பில் முடிவுக்கு இன்னும் வரவில்லை எனவும், அவ்வாறு முடிவெடுக்கப்பட்டால் அது உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் சுவிஸ் உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

  1985 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ரீகன் மற்றும் சோவித் ரஷ்யாவின் ஜனாதிபதி Mikhail Gorbachev உடன் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பும் ஜெனிவாவில் நடந்தது.

  மட்டுமின்றி அமெரிக்கா, சீனா மற்றும் இரு கொரியா நாடுகளும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையானது 1997 முதல் 1999 வரை ஜெனிவாவில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
சட்டம்
வீடியோ
 மரண அறித்தல்