மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை? சுவிஸ் பொலிசார் தீவிர விசாரணை,
 • மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை? சுவிஸ் பொலிசார் தீவிர விசாரணை,

  சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் UBS வங்கியருகே 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இது கணவன் மனைவி பிரச்சினையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது, இறந்தவர்கள் யார் என்று அடையாளம் தெரியாமல் பொலிசார் குழம்பியுள்ளனர்.

  இந்த சம்பவம் Europaallee பகுதியிலுள்ள Lagerstrasseயில் உள்ளூர் நேரப்படி 14:30 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

  உயிரிழந்த இருவரும் இத்தாலியர்கள் என்றும் அவர்களில் அந்தப் பெண் ஒரு வங்கி ஊழியர் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் இந்த செய்திகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.

  பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் “சுவிட்சர்லாந்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் ராணுவத்தில் பணி புரிவதன்மூலமும் திறந்த சந்தையில் கிடைப்பதாலும் துப்பாக்கிகள் சகஜமாக உலாவரத் தொடங்கியுள்ளதால், துப்பாக்கிச் சூடுகளும் சாதாரண விடயமாக மாறி வருகின்றன” என்று தெரிவித்தார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
தொழில் நுட்பம்
வினோத நிகழ்வுகள்
சரித்திரம்
 மரண அறித்தல்