பிரித்தானியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கட்டார் நீதிமன்றம்: நடந்தது என்ன,
 • பிரித்தானியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கட்டார் நீதிமன்றம்: நடந்தது என்ன,

  வங்கிக்கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பிய வழக்கில் பிரித்தானிய தொழிலதிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  பிரித்தானிய தொழிலதிபரான ஜோனாதன் நாஷ்(48) தனது நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

  கட்டாரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஜோனாதன் நாஷ். இவருக்கு வரவேண்டிய தொகை தாமதமாகவே, அதை நம்பி இவர் அளித்த காசோலையும் வங்கிக்கணக்கில் போதிய தொகை இல்லாததால் திரும்பியுள்ளது.

  இதனையடுத்து நாஷுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கட்டார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  இதுவரையான தமது அனைத்து கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டார் சிறையிலேயே தமது உயிர் பிரியும், அல்லது முதியவராகி தள்ளாடும் வயதில் தாம் சிறையில் இருந்து வெளியேறுவேன் என நாஷ் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

  ஆனால், சிறை தண்டனையில் தமக்கு வருத்தம் இல்லை எனவும், இனிமேல் தமது குடும்பத்தை காண முடியாதே என்ற வருத்தமே உண்மையில் வலியைத் தருவதாக நாஷ் தெரிவித்துள்ளார்.

  தற்போது ஐக்கிய அமீரகத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, நாஷின் வழக்கை முன்னெடுத்து நடத்த முடிவு செய்துள்ளது.

  மேலும், இந்த வார துவக்கத்தில் கத்தாரின் அமீரான தமீம் பின் ஹமத் அல் தானி என்பவருக்கு தூதரகம் வாயிலாக பொதுமன்னிப்பு கோரும் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
ஆய்வுக் கட்டுரை
இந்தியச் செய்திகள்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink