ஏன் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை? – வடக்கு முதல்வர்,
 • ஏன் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை? – வடக்கு முதல்வர்,

  எனக்கிருக்கின்ற வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை என வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  இன்று(12) கிளிநொச்சி ஊருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

  இதன் போது பதிலுரைத்த அவர், எனக்கிருக்கின்ற வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை. இருப்பினும் எங்களது உறுப்பினர்கள் சகல விடையங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள்.

  அத்தோடு ஜெனீவாவுக்கு அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றார்கள் என்றும் வேறு யார் யார் செல்கின்றார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் அனைத்து விடயங்களையும் தங்களுடைய பிரதிநிதிகள் எடுத்துரைப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

  சிவநகர் மூத்தோர் சங்க தலைவர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் சங்கத்தின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
தங்க நகை
சுவிஸ் செய்தி
ஜோதிடம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink