இலங்கையில் பேஸ்புக் தடை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வழங்கிய பதில்,
  • இலங்கையில் பேஸ்புக் தடை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வழங்கிய பதில்,

    இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.

    பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விடயம் குறித்து இலங்கையின் அரசாங்கத்துடனும், அரச சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    இனமுறுகலை ஏற்படுத்தும் பதிவுகள் தொடர்பில் தாங்கள் இறுக்கமான கொள்கையை பின்பற்றுவதாகவும், அவ்வாறான பதிவுகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
சினிமா
உலக சட்டம்
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்