உயிரிழந்த சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் புதிய தகவல்,
 • உயிரிழந்த சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் புதிய தகவல்,

  அண்மையில் கண்டியில் பெரும் வன்முறை வெடிப்பதற்கு காரணமான சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

  நான்கு இளைஞர்களால் தாக்கப்பட்ட உயிரிழந்த சிங்கள சாரதி தொடர்பில் அவரது உறவினர் ஒருவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

  அந்த வாக்குமூலத்திற்கமைய தாக்குதலுக்குள்ளான குமாரசிங்க, அதிகாலை ஒரு மணியளவில் என்னை சந்திக்க வந்தார்.

  இதன்போது தன்னை சிலர் தாக்கியதாக தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரது தலையில் காயம் ஒன்றை அவதானிக்க முடிந்ததாக உறவினர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

  சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு நான் ஆலோசனை வழங்கிய போதிலும் குமாரசிங்க அதனை நிராகரிததார்.

  என்னை சந்தித்த பின்னர் தான் ஓட்டி வந்த லொரியின் உதவியாளர் மற்றும் இன்னுமொரு நபருடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

  அங்கிருந்து சென்றவர் அதிகாலை 2 மணியளவில் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தான் தீவிர நிலைக்கு செல்வதாக குறிப்பிட்டார். உடனடியாக அங்கு சென்று அவரை வைத்தியசாலையில் அனுமதித்தேன்.

  எனினும் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்து விட்டார் என உறவினர் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  இதேவேளை, உயிரிழந்த குமாரசிங்கவை அவர் வேலை செய்யும் எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு அருகிலேயே சிலர் தாக்கியுள்ளனர். எனினும் அவரை காப்பாற்றுவதற்கு அங்கிருந்த எவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
தொழில்நுட்பம்
சிறுவர் உலகம்
உலக செய்தி
 மரண அறித்தல்