உலகக் குழுக்களைச் சேர்ந்த 17 பேருக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை பிடிவிறாந்து ரத்து,
 • உலகக் குழுக்களைச் சேர்ந்த 17 பேருக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை பிடிவிறாந்து ரத்து,

  பாதாள உலகக்குழுக்களைச் சேர்ந்த 17 பேருக்கு எதிரான இன்டர்போலின் சிகப்பு எச்சரிக்கை பிடிவிந்றாது ரத்து செய்யப்பட்டுள்ளது.

  இந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளாக சிகப்பு எச்சரிக்கை பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

  இத்தாலி, பிரிட்டன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  சிகப்பு எச்சரிக்கை பிடிவிறாந்து ரத்து செய்யப்பட்டுள்ளதனால் இவர்களை அந்தந்த நாடுகளின் பொலிஸார் கைது செய்யவில்லை என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  இதற்கு முன்னதாக 87 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கைகள் ரத்தாகியிருந்தன.

  அரசாங்கத்தின் கோரிக்கை மற்றும் குறித்த நபர்கள் உயிரிழத்தல் ஆகிய காரணிகளின் போது இவ்வாறு சிகப்பு எச்சரிக்கை ரத்தாகும் என இன்டர்போல் தெரிவித்துள்ளது.

  எனினும், இலங்கை பொலிஸார் குறித்த நபர்கள் மரணித்தனர் என அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
தொழில் நுட்பம்
மங்கையர் மருத்துவம்
தொழில்நுட்பம்
 மரண அறித்தல்