பண்ணையில் மூன்று மடங்கு அதிகமான 178 கிராம் எடையுடன் கோழிமுட்டை - ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்,
 • பண்ணையில் மூன்று மடங்கு அதிகமான 178 கிராம் எடையுடன் கோழிமுட்டை - ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்,

  ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில், வழக்கத்துக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன் று மடங்கு பெரிய சைஸ் முட்டையை கோழி ஒன் று போட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆஸ்திரேலியாவின் காய்ன்ஸ் எனும் இடத்தில், ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டை பண்ணை நடத்தி வருகிறார். இருதினங்களுக்கு முன்பு இவரது பண்ணையில் வியக்கதக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது அங்கிருக்கும் கோழி ஒன் று பெரிய சைஸ் முட்டை போட்டுள்ளது.

  சாதாரண முட்டை 58 கிராம் எடை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன் று மடங்கு அதிகமாக 178 கிராம் எடையுடன் உள்ளது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்ணையின் உரிமையாளர், அந்த முட்டையை எடுத்து எல்லோரிடமும் காட்டியுள்ளார். பிறகு அந்த முட்டையை தனியாகவும், மற்ற சாதாரண முட்டைகளுடனும் வைத்து போட்டோ எடுத்துள்ளார்.

  ஏற்கனவே முட்டையைப் பார்த்து ஆச்சர்யத்தில் இருந்த பண்ணையின் உரிமையாளருக்கு மற்றொரு ஆச்சர்யமும் காத்திருந்தது.  பெரிய முட்டையை உடைத்தபோது, அதற்குள் சின்ன சைஸ் முட்டை ஒன்று இருந்தது. அதையும் புடைப்படம் எடுத்த ஸ்காட் ஸ்டாக்மேன், இதனை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார்.

  இதையடுத்து இந்த பெரிய சைஸ் முட்டை விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  ஒரு கோழி இவ்வளவு பெரிய முட்டையை போடுவதற்கு வாய்ப்பே இல்லை என விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
உலக சட்டம்
மங்கையர் பகுதி
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink