ஜேர்மன் இளம்பெண்ணுக்கு ஈராக்கில் சிறை தண்டனை விதிப்பு,
 • ஜேர்மன் இளம்பெண்ணுக்கு ஈராக்கில் சிறை தண்டனை விதிப்பு,

  ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்ட ஜேர்மானிய இளம்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  ஈராக்கில் ஐ.எஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஜிகதி பெண்கள் பலர் ராணுவத்திடம் சிக்கினர்.

  இதில் கடந்த ஆண்டு ஜேர்மானிய இளம்பெண்ணான 17 வயது லிண்டா ராணுவ நடவடிக்கையின்போது கைதானார்.

  இவர் தொடர்பான வழக்கு ஈராக்கில் நடைபெற்று வந்துள்ளது. இன்று விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், ஐ.எஸ் ஆதவு நிலை மேற்கொண்டதாக கூறி 5 ஆண்டுகள் தண்டனையும், சட்டவிரோதமாக ஈராக்கில் நுழைந்ததாக கூறி ஓராண்டு சிறை தண்டனையும் என 6 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

  தலைநகர் பாக்தாதில் நடைபெற்ற இந்த ரகசிய விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  குறித்த இளம்பெண்ணுக்கு ஆதரவாக ஜேர்மன் அரசு சர்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என முதலில் தகவல்கள் வெளியானது, ஆனால் விசாரணையின்போது ஈராக்கில் உள்ள ஜேர்மன் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கடந்த 2015 மற்றும் 16-ஆம் ஆண்டு லிண்டா ஈராக்கில் ஐ.எஸ் குழுக்களுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

  பின்னர் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

  இதனிடையே அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளின் உதவியால் ஐ.எஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததும் லிண்டா மற்றும் அவருடன் இருந்த சில பெண்களும் தலைமறைவாகினர்.

  இந்த நிலையில் ஈராக்கிய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஜிகாதி பெண்கள் பலர் கைதாகினர். அவர்களில் லிண்டாவும் ஒருவர்.

  ஈராக்கில் தங்களுக்கு சாதகமான விசாரணை நடைபெறாது எனவும், அவரை ஜேர்மனியில் அழைத்து வந்து இங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என லிண்டாவின் தாயார் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
சுவிஸ் செய்தி
ஜோதிடம்
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink