பூனை மீசை மூலிகை மருத்துவ சிறப்புகள்,
 • பூனை மீசை மூலிகை மருத்துவ சிறப்புகள்,

  பூனை மீசை இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

  பூனை மீசை, வாத நோய், நீரழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல்
  இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை.

  பூனை மீசை மூலிகை சர்க்கரை நோய், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருகிறது. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது. சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது. கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

  சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

  1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம் .

  தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்..

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சுவிஸ் செய்தி
சினிமா
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்