சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கும் அதிகாரிகள் சமூக ஆர்வலர் புகார்,
 • சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கும் அதிகாரிகள் சமூக ஆர்வலர் புகார்,

  பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சிறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர், ராமலிங்க ரெட்டியிடம் புகார் அளித்துள்ளதாக, சமூக ஆர்வலர், நரசிம்ம மூர்த்தி தெரிவித்தார்.

  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தற்போது, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில், விதிமுறைகளை மீறி, சலுகைகள் அளிக்கப்படுவதாக, சமீபத்தில் புகார் எழுந்தது.

  சட்டமீறல்:

  இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையிலான கமிட்டி அறிக்கையை அளித்தது. இதன்பின்னும், சிறையின் சூழ்நிலை மாறவில்லை என, தகவல்வெளியாகி உள்ளது.

  இது தொடர்பாக, சமூக ஆர்வலர், நரசிம்ம மூர்த்தி கூறியதாவது: சாதாரண கைதிகளுக்கு, தங்கள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பளிக்காத சிறை அதிகாரிகள், டிசம்பர், 28ல், சசிகலாவை சந்தித்து பேச, அவரது உறவினர் தினகரனுக்கு மூன்று மணிநேரம் வாய்ப்பளித்து, சட்டத்தை மீறி உள்ளனர்.

  முறைகேடு:

  பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது குறித்து, சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம், புகார் அளித்துள்ளேன். கடந்த, 2017 ஜனவரி முதல், நவம்பர் வரை, பரப்பன அக்ரஹாரா சிறையில், எத்தனை கைதிகளுக்கு, என்ன காரணங்களுக்காக பரோல் நிராகரிக்கப்பட்டது என, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன். கைதிகளின் தனிப்பட்ட விஷயம் என்பதால், தகவல் தெரிவிக்க முடியாது என, சிறை அதிகாரிகள் கூறினர்.

  இது குறித்து, மேல் முறையீடு செய்தபோது, நான் கேட்ட தகவல்களை தெரிவிக்கும்படி, உயர் அதிகாரி உத்தரவிட்டார். ஆனால், சிறை அதிகாரிகள் தகவல் தர மறுக்கின்றனர். இதன் மூலம் சிறையில், முறைகேடு நடப்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
மருத்துவம்
எம்மவர் நிகழ்வுகள்
உலக சட்டம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink