உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 வெற்றி பெற்ற கட்சிகள்,
 • உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 வெற்றி பெற்ற கட்சிகள்,

  ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது.

  இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

  இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது.

  மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன.

  முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்....

  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 231 சபைகளில் வெற்றி

  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 41 சபைகளில் வெற்றி

  ஐக்கிய தேசிய கட்சி - 34 சபைகளில் வெற்றி

  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 7 சபைகளில் வெற்றி

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) - 5 சபைகளில் வெற்றி

  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4 சபைகளில் வெற்றி

  சுயேட்சைக் குழு- 4 சபைகளில் வெற்றி

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- 2 சபைகளில் வெற்றி

  ஈழ மக்கள் ஜநனாயக கட்சி - 2 சபைகளில் வெற்றி

  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 2 சபைகளில் வெற்றி

  தேசிய காங்கிரஸ் - 2 சபைகளில் வெற்றி

  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 சபையில் வெற்றி

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 சபையில் வெற்றி

  தமிழர் விடுதலை கூட்டணி - 1 சபையில் வெற்றி

  தேசிய மக்கள் கட்சி - 1 சபையில் வெற்றி

  எக்சத் லங்கா மகா சபா கட்சி - 1 சபையில் வெற்றி

  முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 1 சபையில் வெற்றி.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மரண அறிவித்தல்
வீடியோ
இலக்கியம்
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink