அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறது,
 • அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறது,

  பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறது.

  பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக போரிட அமெரிக்கா நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வந்தது. பாகிஸ்தான் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஏமாற்றுவதாக நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா நிறுத்துவிட்டது.

  பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட அமெரிக்கா வழங்கிய US TOW-2A எதிரிகளின் ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை வழங்கியது. இந்த ஏவுகணைகளை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறது என்பது தொடர்பான ஆதாரங்களை இந்தியா அமெரிக்காவிடம் வழங்கி உள்ளது. தற்பாதுகாப்பு என்ற நோக்கத்தில் பாகிஸ்தானுக்கு அக்டோபர் 2007-ம் ஆண்டு அமெரிக்க காங்கிரசால் இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக போருக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியலில் இடம்பெற்று உள்ளது.

  2015 ஆம் ஆண்டில் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா புதுப்பித்தது.

  கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா மிகப்பெரிய பாதுகாப்பு நட்பு நாடாக அறிவித்தது. நேட்டோ கூட்டாளிகளுக்கு இணையாக இந்தியாவை சேர்க்க அமெரிக்க காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. வர்த்தகம், தொழில்நுட்ப பகிர்வு ஆகியவற்றில் நேட்டோ கூட்டாளிகளுடன் அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந்தத்தை போன்று இந்தியாவுடனும் பகிர்வதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்றம் கொண்டு வந்தது.

  எல்லையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் புதுடெல்லிக்கு கொண்டு வரப்பட்டது, இவை அமெரிக்க பிரதிநிதிகளிடம் காட்டப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுகிறோம் என முதலை கண்ணீர் வடிக்கும் பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை பாகிஸ்தான் எப்படி பயன்படுத்துகிறது என்பதை இந்தியா ஆதாரத்துடன் காட்டிஉள்ளது. கடந்த காலங்களில் போர் தளவாடங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

   ஆதாரங்கள் சமர்பிப்பு

  * பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் பயன்படுத்திய ஏவுகணைகள் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டது.

  * பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்திய போது பயன்படுத்திய TOW-2A ஏவுகணையின் சிதைவு பாகங்கள் சேகரிக்கப்பட்டு புதுடெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. புதுடெல்லியில் வைத்து அமெரிக்க பிரதிநிதிகளிடம் விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
ஆய்வுக் கட்டுரை
மரண அறிவித்தல்
சினிமா
 மரண அறித்தல்