சொத்துக்காக மகனை கொலை செய்து பயணப் பெட்டியில் அடைத்து வைத்த தாய்,
 • சொத்துக்காக மகனை கொலை செய்து பயணப் பெட்டியில் அடைத்து வைத்த தாய்,

  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மகனை சொத்துக்காக கொலை செய்து சடலத்தை பயணப் பெட்டியில் அடைத்து வைத்த மாற்றாந்தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  குஜராத் மாநிலத்தின் கிருஷ்ணா நகரை சேர்ந்த நபர் ஒருவர் முதல் திருமணமாகி விவாகரத்து கிடைத்த நிலையில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

  முதல் திருமணத்தின் மூலம் குறித்த நபருக்கு மகனும் குறித்த பெண்ணுக்கு மகளும் உள்ளனர்.

  குறித்த நபரின் சொத்துக்கள் அனைத்தும் அவர் மகன் பெயரில் இருந்துள்ளது.

  இது குறித்த நபரின் இரண்டாவது மனைவிக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பின்னாளில் தனது மகளுக்கு எந்த சொத்தும் கிடைக்காது என நினைத்து அவர் பயந்துள்ளார்.

  இதையடுத்து மாற்றாந்தாயான குறித்த பெண் மகனை கொல்ல முடிவெடுத்து அவன் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

  பின்னர் சடலத்தை ஒரு பயணப் பெட்டியில் அடைத்து வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

  இதையடுத்து நாடகமாடி தப்பிக்க எச்சரிக்கை அலாரத்தை அழுத்திவிட்டு இரண்டு மணி நேரமாக மகனை காணவில்லை என கூறியுள்ளார்.

  சிறுவனை எங்கு தேடியும் அவன் கிடைக்காததால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.

  சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்த பொலிஸார் வீடு முழுவதும் தேடிய நிலையில் சிறுவனது சடலம் அடைத்து வைக்கப்பட்ட பயணப் பெட்டி அவர்கள் கையில் கிடைத்துள்ளது.

  பொலிஸாரினால் சந்தேகத்தின் பரில் மாற்றாந்தாயிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

  குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து பொலிஸார் குறித்த பெண்னை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்தியச் செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
தங்க நகை
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink