பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட மகன்,
  • பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட மகன்,

    ஸிம்பாப்வேவில் பெற்ற தாயை மகன் கர்ப்பமாக்கி அவரையே திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

    மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பெண்ணின் கணவர் 12 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் தனது 23 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தாய் மகன் என்ற உறவை மீறி இருவருக்குள்ளும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து தாய் கர்ப்பமடைந்துள்ளார். ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் தாய் இந்த விடயத்தை வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.


    இதை கேட்டு அவர் வாழும் கிராம பஞ்சாயத்து கவுன்சில் அதிர்ச்சியடைந்ததோடு இருவரையும் கிராமத்தை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.

    ஆனால், “என் கணவர் இறந்த பின்னர் யாரும் எனக்கு உதவில்லை, நான் கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்தேன், தற்போது அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான். அந்த பணம் அவனை வேர்வை சிந்தி வளர்த்த எனக்கு தான் சேர வேண்டும். வேறு பெண்களுக்கு செல்லக்கூடாது.

    இதனால் நான் அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன்” தனது தரப்பு நியாயங்களை தாய் எடுத்து கூறியுள்ளார்.

    இருப்பினும் கிராம மக்கள் எதிர்த்துள்ளனர்.

    “இந்த திருமணத்தை எங்களால் அனுமதிக்க முடியாது. முடிவை மாற்றவில்லையெனில் ஊரை விட்டு தாயும், மகனும் வெளியேற வேண்டும்” என ஊர் தலைவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து தாயும் மகனும் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.

    இது கடந்தாண்டு நடந்த நிலையில் தற்போது தாய்க்கு குழந்தை பிறந்து தாயும் மகனும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
சட்டம்
இலங்கை செய்தி
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்