வளர்ப்புப் பூனையால் 10 கோடி ரூபா சம்பாதித்த பெண்,
 • வளர்ப்புப் பூனையால் 10 கோடி ரூபா சம்பாதித்த பெண்,

  அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் வளர்ப்புப் பூனையின் புகைப்படத்தைப் பயன்படுத்திய நிறுவனத்திடமிருந்து 10 கோடி ரூபா (£500,000) நட்ட ஈடு பெற்றிருக்கிறார்.

  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த டபாத்தா பண்ட்சி என்ற பெண்ணின் வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை ஒரு நிறுவனம் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தியது. இந்த பூனை கடந்த 2012 ஆம் ஆண்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் மூலம் மிகவும் பிரபலமானது. கோபத்துடன் இருக்கும் பூனையின் முகத்தை அனைவரும் பார்த்து இரசித்தனர்.


  இந்நிலையில், கிரனேட் பிவரேஜ் என்ற நிறுவனம் பூனையின் புகைப்படத்தை குளிர்பான விளம்பரத்திற்கு பயன்படுத்தப் போவதாக உரிமையாளர் பண்ட்சியிடம் அனுமதி கோரியது.

  ஆனால், அனுமதி இல்லாமல் பல பொருட்களின் விளம்பரத்திற்கு பயன்படுத்தியதால் அந்நிறுவனம் மீது மூன்று ஆண்டுகளுக்கு முன் காப்புரிமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பண்ட்சிக்கு 10 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

  தனது வளர்ப்புப் பூனையின் மூலம் டபாத்தா பண்ட்சி 10 கோடி ரூபா சம்பாதித்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
வினோத நிகழ்வுகள்
சட்டம்
 மரண அறித்தல்