பிரபல ரவுடி பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரண்,
  • பிரபல ரவுடி பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரண்,

    சென்னை: என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார். அம்பத்தூர் துணை ஆணையர் முன் பினு சரணடைந்தார். பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கத்தில் ரவுடிகும்பல் பிறந்தநாள் கொண்டாடியது. பிப்ரவரி 6-ல் இரவு கொண்டாட்டத்தில் கூடிய 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். ரவுடி கூட்டத்தின் தலைவர் பினு போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். இந்நிலையில் அம்பத்தூர் காவல்நிலையத்தில் பிரபல ரவுடி பினு சரணடைந்துள்ளார்.

    மாங்காடு மலையம்பாக்கத்தில் கடந்த 6ம் தேதி பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் என்ற கொண்டாட்டத்தின் பேரில் ரவுடிகள் மாநாடு நடைபெற்றது. இதனை அறிந்த போலீசார் சுற்றி வளைத்து 75 ரவுடிகளை கைது செய்தனர். தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகள் 100 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நோக்கமே பிரபல ரவுடி ராதா கிருஷ்ணனை ஒழிக்க வேண்டும் என்பது தான். கடந்த சில நாட்களாக சென்னையில் ஓய்ந்திருந்த ரவுடிகள் மோதல் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது.

    இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகளை தேவைப்பட்டால் சுட்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டனர். இந்நிலையில் இன்று ரவுடி பினு  சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
மரண அறிவித்தல்
உலக செய்தி
 மரண அறித்தல்