இந்தியா உதவிக்கு எதிர்ப்பு; சீனாவின் மூக்கை உடைத்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்,
 • இந்தியா உதவிக்கு எதிர்ப்பு; சீனாவின் மூக்கை உடைத்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்,

  மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் அதிரடி நடவடிக்கையால் பெரும் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

  மாலத்தீவில் நெருக்கடி நிலை பிரகடனம், அரசியல் கட்சியினர் மற்றும் நீதிபதிகள் கைது நடவடிக்கை நிலையை மோசமாக்கியது.

  இந்நிலையில் இந்தியா மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்தார்.

  மாலத்தீவு மக்களின் சார்பாக இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கிறோம். “மாலத்தீவு அதிபரால் கைது செய்யப்பட்ட நீதிபதிகள், அரசியல் கட்சியினரை கைது செய்ய ராணுவ பலத்துடன் இந்தியா தூதரை அனுப்ப வேண்டும். இந்தியா அங்கு ராணுவத்தை நிலை நிறுத்த கோருகிறோம். அமெரிக்க வங்கிகள் வழியாக மாலத்தீவு பிராந்திய தலைவர்களுக்கு செல்லும் நிதி பரிமாற்றத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும்,” என மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து மாலத்தீவில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனிப்பதாகவும், அங்கு நிலை கவலையளிப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை குறிப்பிட்டது.

  இதற்கிடையே அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கம் காட்டும் சீனா, மாலத்தீவில் ராணுவ தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

  இதுபோன்ற நிலையானது மாலத்தீவில் நிலையை மேலும் மோசமாக்கும் என்று சீனா கூறியது.

  இப்போது சீனாவின் மூக்கை உடைத்து உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத், இந்தியா விடுதலை கொடுப்பவர்கள்தான் என குறிப்பிட்டு உள்ளார்.

  "இவற்றின் முடிவுகளை உட்புகுந்தால், குழப்பத்தை உண்டாக்குமாறு கேட்டுக்கொள்வது ஒத்ததாகும், இது குழப்பத்திற்கு வழிவகுக்கும்.

   “உங்களுக்கு உள்ளே பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்பது எங்களை வன்முறையை அதிகரிக்க கேட்டுக் கொள்வது போலது, இதனால் நிலையை மேலும் குழப்பான நிலைக்கு தள்ளமுடியும். இந்தியாவின் செயல்பாட்டை மாலத்தீவு மக்கள் நேர்மறையாகவே பார்க்கிறார்கள். 1988-ல் அவர்கள் மாலத்தீவு வந்தார்கள், பிரச்சனையை சரிசெய்தார்கள். தங்கள் பணி முடிந்ததும் திரும்பிவிட்டார்கள். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கிடையாது, அவர்கள் எங்களை விடுவித்தவர்கள்தான். எனவே இப்போதும் மாலத்தீவு மக்கள் இந்தியாவை எதிர்பார்க்கின்றனர்,” என நஷீத் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

  1988-ம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல் கயூமைக் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக இந்தியாவின் உதவியை கோரினார். அவருடைய அழைப்பிற்கு மதிப்பளித்த இந்தியா, அங்கு படைகளை அனுப்பி நிலையை சரிசெய்தது. தேசத்தில் அமைதி திரும்பியதும் மீண்டும்  இந்திய ராணுவம் சொந்த நாடு திரும்பியது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஜோதிடம்
சுவிஸ் செய்தி
எம்மவர் நிகழ்வுகள்
வீடியோ
 மரண அறித்தல்